Simple Ways Lighten Upper Lip
சிலருக்கு ஹார்மோன் காரணத்தினால், அதிகமாக முடி வளரும். அதனால் முகத்தில் எல்லாம் முடியானது வளர்ச்சி அடையும். சிலருக்கு மீசை இருப்பது போல கூட இருக்கும். ஆகவே உதட்டிற்கு மேல் உள்ள பகுதி கருமையான நிறத்தில் காயப்படும். எனவே அத்தகைய கருமையான தோற்றத்தை ஏற்படுத்தும் முடியை நீக்க சிலர் த்ரெட்டிங் செய்வார்கள். இதனால் கடுமையான வலி தான் ஏற்படும்.
மேலும் இந்த கருமை நிறம் ஏற்படுவதற்கு அதிக சூரிய வெப்பம் சருமத்தில் படுவதும், ஆரோக்கியமற்ற சில உணவுகளும் தான் உதட்டிற்கு மேல் கருமையை ஏற்படுத்துகிறது. ஆகவே அத்தகைய வலி ஏற்படாமல், ஈஸியாக அந்த பிரச்சனையை சரிசெய்ய வீட்டிலேயே மருந்துகள் இருக்கின்றன. அவை என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, சருமத்தை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

உதட்டிற்கு மேலே இருக்கும் கருமையை போக்க சில டிப்ஸ்...
உடனடியாக போக்குவதற்கு...

* உதட்டிற்கு மேலே ஃபேஸ் ப்ளீச்சை தடவி, பின் சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதனால் அதிலுள்ள பொருள் உடனடியாக கருமை நிறத்தை போக்கிவிடும்.

வீட்டு மருந்துகள்...

* உதட்டின் மேல் பகுதியை எலுமிச்சை, தேன் அல்லது தயிரால் நன்கு ப்ளீச் செய்து வந்தால், நாளடைவில் அந்த இடத்தில் உள்ள கருமை நீங்கிவிடும்.

* முகத்தை ஆப்ரிகாட், பாதாம் அல்லது கடலை மாவால் ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி, சருமம் சுத்தமாக, பளிச்சென்று காணப்படும்.

* இல்லையெனில் பீட்ரூட் அல்லது மாதுளையின் ஜூஸை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்தால், முகத்தின் நிறம் சற்று அதிகரித்து, புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

கருமை நிறத்தை வராமல் எப்படி தடுக்கலாம்?

* ஆல்கஹால், காஃப்பைன் மற்றும் புகையிலை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை உதட்டின் நிறத்தை மாற்றுவதோடு, பற்கள் மற்றும உதட்டிற்கு மேலேயும் கருமையை உண்டாக்கும்.

* ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீரையாவது குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள கழிவுகள் நீங்கிவிடும். மேலும் சருமம் நன்கு சுத்தமாக, பொலிவோடு காணப்படும்.

* உதட்டிற்கு கெமிக்கல் கலந்த மிகவும் அடர்ந்த நிற லிப்ஸ்டிக், லிப் பாம் போடுவதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக இயற்கை லிப் பாம்களான நெய், வெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தினால், உதடு வறட்சி அடையாமல் இருக்கும்.
 
Top