நேற்று முன்தினம், வழக்கு விசாரிக்கப்பட்டது.""ருச்சி செய்த குற்றத்திற்கு என்ன இழப்பீடு கோருகிறீர்கள்?'' என, நீதிபதி, பாதிக்கப்பட்ட தேவேந்தர் குப்தாவிடம் கேட்டார்.""என் மீது அவர் காரை மோதியது கூட தவறில்லை; நான் ரத்த வெள்ளத்தில் கிடந்த போது, கண்டுகொள்ளாமல் சென்றது தான் எனக்கு தவறாக படுகிறது. இதற்காக அவரிடம் இருந்து பணம் எதையும் பெற விரும்பவில்லை. செய்த தவறுக்கு தண்டனையாக, டில்லி குளிரில் அவதிப்படும் ஏழைகளில், 400 பேருக்கு, ருச்சி அகுஜா, கம்பளிகளை வழங்க வேண்டும்,'' என்றார்.
விசாரணைக்கு வந்திருந்த ருச்சி உட்பட, நீதிமன்றத்தில் இருந்த அனை வருக்கும், ஆச்சர்யமாக போனது. "இப்படியும் ஒரு நல்ல மனிதர் இருக்கிறாரே' என, பலரும் வியந்தனர்.தேவேந்தரின் கோரிக்கையை, ருச்சி ஏற்கிறாரா, இல்லையா என்பதை, பிப்ரவரி 16ம் தேதி தெரிவிக்குமாறு கூறி, விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.