உலகின் மிகப்பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனம் இத்தாலியை சேர்ந்த ஃபெராரி. சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், கார் பிரியர்கள், பணக்காரர்கள் என அனைவருள்ளும் ஃபெராரியை சொந்தமாக்கிக்கொள்ளும் கனவும், தாகமும் இருக்கும். சிறந்த ரேஸிங் பின்னணி கொண்ட ஃபெராரியின் நிறுவனர் ஒரு ரேஸர்.

தனது கார் பந்தய அணிக்கு நிதி ஆதாரத்துக்கு உதவும் வகையிலேயே கார் விற்பனையை துவங்கியது ஃபெராரி. மேலும், உலகில் அதிக ஃபார்முலா ஒன் ரசிகர்களை கொண்ட அணியும் ஃபெராரிதான். சரி, ஃபெராரி நிறுவனம் பற்றிய இன்னும் சுவையான கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

நிறுவனர்

ஃபெராரி நிறுவனத்தை துவங்கிய என்ஸோ ஃபெராரி ஒரு படு தீவிர கார் பந்தய வீரர். 1898ல் பிறந்த இவர் 13 வயதில் கார் ஓட்டப் பழகினார். 1919ம் ஆண்டு முறைப்படி இவர் தனது கார் பந்தய வீரராக வாழ்க்கையை துவங்கினார். அதுமுதல் ஏராளமான போட்டிகளில் வெற்றி பெற்றார்.

கார் ஆலை

இத்தாலியிலுள்ள மரநெல்லோ என்ற இடத்தில் 1940ல் ஃபெராரியின் சிறிய கார் ஆலை துவங்கப்பட்டது. ஆட்டோ ஏவியோ காஸ்ட்ரிசியோன் என்ற பெயரில் ஃபியட் ஸ்போர்ட்ஸ் காரை அடிப்படையாக கொண்ட ரேஸ் காரை தயாரித்தது.

1947ல் முதல் கார்

1947ல் டிப்போ 125 என்ற பெயரில் முதல் ஸ்போர்ட்ஸ் காரை சொந்தமாக ஃபெராரி தயாரித்தது. இந்த காருக்கான வி12 எஞ்சினை ஜியாவோசினா என்பவர் டிசைன் செய்தார்.

முதல் ரேஸ் வெற்றி

1947ல் ஃபெராரி ரேஸ் அணி முதல் வெற்றியை ருசித்தது. ஃபெராரி அணியின் டிரைவராக ஃபிராங்கோ கார்டெஸி இருந்தார்.

ரேஸ் கார் தயாரிப்புக்கு புதிய ஆலை

மரநெல்லோ ஆலையில் ரேஸ் கார் உற்பத்தியை ஃபெராரி நிறுத்திவிட்டது. ரேஸ் கார்களை எளிதாக சோதனை நடத்தும் வகையில் ஃபியரானோ என்ற இடத்தில் உள்ள ரேஸ் டிராக்குக்கு அருகில் புதிய ஆலையை நிறுவியது ஃபெராரி.


கார் தயாரிப்பில் மும்முரம்

நாள் ஒன்றுக்கு 14 கார்கள் மட்டுமே ஆலையில் தயாரிக்கப்படுகிறது. படத்தில் 458 இட்டாலியா ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதை காணலாம். ஆண்டுக்கு 6,400 கார்களை ஃபெராரி தயாரிக்கிறது.

ஃபெராரியின் தற்போதைய தலைவர்

ஃபெராரியின் தற்போதைய தலைவர் லூக்கா டி மான்டிஸிமோலோ ஆலையில் பணிகளை பார்வையிட வந்தபோது கொடுத்த போஸ்.

ஃபெராரியின் காஸ்ட்லி மெஷின்

ஃபெராரியின் 250 ஜிடிஓ கார் ஏலத்தில் 12 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. இதுவே ஃபெராரியின் அதிகபட்ச மதிப்பு கொண்ட காராக கருதப்படுகிறது.

ஃபெராரி உரிமையாளர் அமைப்பு

ஃபெராரி  கார் உரிமையாளர்களுக்கான பிரத்யேக அமைப்பும் 18 நாடுகளில்  செயல்படுகிறது.

பறக்கும் குதிரை சின்னம்

கார் பந்தய போட்டியில் என்ஸோ ஃபெராரி ஒரு முறை வெற்றி பெற்றபோதுஅந்த போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ஒரு தம்பதி அவருக்கு பரிசாக சிறிய கோப்பையை வழங்கினர். அதில், முதலாம் உலகப்போரில் இத்தாலிய விமானப் படை வீரராக பணிபுரிந்த தனது மகன் பராக்கா தனது விமானத்தின் இருபுறங்களில் பயன்படுத்திய துள்ளும் குதிரை சின்னம் பதிக்கப்பட்டிருந்தது. ஃபெராரியை அந்த சின்னம் பெரிதும் கவர்நத்து விடவே அதுவே பின்னாளில் வண்ணத்தில் சில மாற்றங்களுடன் ஃபெராரி சின்னமாக மாறியது.

அபுதாபி ஃபெராரி வேர்ல்டு

உலகின் மிகப்பெரிய உள்ளரங்க பொழுதுபோக்கு பூங்காவை அபுதாபியில் அமைத்துள்ளது ஃபெராரி. மேலிருந்து பார்த்தால் நட்சத்திர மீன் போன்ற வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட சிவப்பு வண்ண கூரை, அதன் மீது 213 அடி நீளத்துக்கு வரையப்பட்ட ஃபெராரி லோகோ ஆகியவை அசத்தலாக இருக்கின்றன.

 
Top