0
 
நண்பனின் தங்கைக்கு திருமணம் நடந்தது. மாப்பிள்ளையின் நண்பர்கள் ஏழெட்டு பேர் வந்திருந்தனர். திருமணத்திற்கு வந்திருந்த இளம் பெண்களை, "சைட்' அடித்து, இஷ்டப்படி கிண்டல் செய்தனர். திருமண நாளில் தகராறு வேண்டாம் என்பதால் பொறுத்துக் கொண்டோம்.

அன்று இரவு, முதலிரவு அறைக்குள் மாப்பிள்ளையும், பெண்ணும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பின், அளவுக்கு மீறி உற்சாக பானம் அருந்தியதால், சுயநினைவின்றி, முதலிரவு அறைக்கதவை பலமாக தட்டினர் மாப்பிள்ளையின் நண்பர்கள். "டேய் மாப்ள... வெளியே வாடா... வழக்கம்போல் எங்களோடு சேர்ந்து குடிச்சிட்டு, உள்ளே போடா...' என்று கத்தி கலாட்டா செய்தனர். அதுவரையில் பொறுமையோடு இருந்த நாங்கள், ஆத்திரம் தாங்காமல், கட்டை, கம்புகளால் மாப்பிள்ளையின் நண்பர்களை அடித்து விரட்டினோம்.

திருமணத்திற்கு வரும் நண்பர்கள், நாகரிகமாக நடந்து கொள்ளவில்லை என்றால் இந்த கதிதான். திருமணம் என்றாலே, நண்பர்களுக்கு மது வாங்கி கொடுக்கும் கலாசாரத்தை நிறுத்தினாலே பாதி பிரச்னை தீரும்.

கருத்துரையிடுக Disqus

 
Top