இன்னொரு சமயம், எதிர் வீட்டு அம்மாள், "தம்பி உனக்கு பீஸ் போடத் தெரியுமா?' என்றார். "எனக்குத் தெரியாது...' என்று சொல்வதற்குள் கூனி, குறுகி போய் விட்டேன். சின்ன வயதில் இருந்தே, "அதை தொடாதே ஷாக் அடிக்கும், அங்க போகாதே விழுந்துடுவ...' என்று, பயமுறுத்தி வளர்க்கப்பட்டதால், முப்பது வயதாகியும், கூச்சத்தாலும், பயத்தாலும் எந்த காரியத்தையும் தனியாக செய்ய முடிவதில்லை.
எனவே, பெற்றோரே... உங்கள் குழந்தைகளை தைரியமுள்ள, அறிவுள்ள குழந்தைகளாக வளருங்கள். உங்கள் வீடுகளில் தச்சர், எலக்ட்ரீஷியன், பெயின்டர் ஆகியோர் வேலை செய்யும் போது, பிள்ளைகளை பார்க்க விடுங்கள். அவற்றை கூர்ந்து கவனித்து, திரும்ப செய்யுமளவிற்கு, அவர்களை பழக்குங்கள். எல்லாவற்றையும் கற்று வைத்திருந்தால், அவசரத் தேவைகளுக்கு உதவுவதுடன், சுய தொழில் செய்து முன்னேறுவதற்கும் வழி உண்டாகும்.
கருத்துரையிடுக Facebook Disqus