கடன் அட்டைகளுக்கு மட்டுமே பயன்பாட்டில் இருந்த ஏ.டி.எம்., வசதி, தற்போது அனைத்து வங்கிப்பணி, பணபரிவர்த்தனைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இயந்திரத்தில் கார்டை நுழைத்து, ரகசிய எண்ணை அழுத்தி, பணம் எடுக்கும் சில நொடிகளில், கார்டின் ஜாதகமும், ரகசியக் குறியீட்டு எண்ணும், திருடர்களால் களவாடப்பட்டு, அதன் மூலம் லட்சக்கணக்கில் திருடப்படும் சம்பவங்களும் சமீப காலமாக அதிகரித்துள்ளன.

"சைபர் க்ரைம்' போலீசும் கொள்ளையைத் தடுக்க, "பின் எண்ணை' அவ்வப்போது மாற்றச் சொல்லி அறிவுறுத்துகிறது. ஆனாலும், கொள்ளை சம்பவங்கள் தொடர்கதையாக@வ உள்ளன. இதை முற்றிலும் தடுக்க, ஒரு உபாயம் உள்ளது. மிஷினில் கார்டை நுழைத்து, பின் எண்ணையும் அழுத்திய பின், வந்திருப்பவர் கார்டின் உண்மையான உரிமையாளர் தானா என்பதை அறிய, இயந்திரம் அவரது பிறந்த தேதி மற்றும் தந்தையின் பெயரை மிஷினில் அழுத்தச் சொல்லலாம்.

இதனால், பரிவர்த்தனைக்கு, ஓரிரு நிமிடங்கள் கூடுதலாகலாம். ஆனால், நம்முடைய அட்டையின் ரகசிய எண்ணும், மற்ற விவரங்களும் திருடப்பட்டு, அதன் மூலம் நிகழும் கொள்ளை தவிர்க்கப்படும். வங்கிகளும், காவல் துறையும் கவனத்தில் கொள்ளுமா?
 
Top