0
வாஷிங்டன்: உலகின் டாப் 20 'சோம்பேறி' நாடுகளின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் மால்டா உள்ளது. இந்த பட்டியலில் சுறுசுறுப்புக்கு பெயர் போன ஜப்பான் கூட 11வது இடத்தில் உள்ளது தான் ஆச்சரியமாக உள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா இல்லை. தென் ஆப்பிரிக்கா, பூடான், நமீபியா, ஈராக், துருக்கி, சைப்ரஸ், இத்தாலி, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளும் கூட இதில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பர் 1 'சோம்பேறி' மால்டா: 
உலகின் மிகப்பெரிய 'சோம்பேறி' நாடாக தென் ஐரோப்பா நாடான மால்டா உள்ளது. இங்குள்ள 71.9 சதவீதம் பேர் 'சோம்பேறி'களாக இருக்கிறார்களாம்.

2வது இடத்தில் ஸ்வாசிலாந்து 
 உலகின் இரண்டாவது பெரிய 'சோம்பேறி' நாடு தென் ஆப்பிரிக்க நாடான ஸ்வாசிலாந்து. இங்குள்ள மக்களில் 69 சதவீதம் பேர் 'சோம்பேறி'கள்.
 
3வது இடத்தில் சவூதி அரேபியா
 'சோம்பேறி' நாடுகளின் பட்டியலில் 3வது இடம் சவூதி அரேபியாவுக்கு கிடைத்துள்ளது. இங்கு வசிப்பவர்களில் 68.8 சதவீதம் பேர் 'சோம்பேறி'கள்.

 
4வது இடத்தில் செர்பியா 
 
உலகின் 4வது பெரிய 'சோம்பேறி' நாடு செர்பியா. இங்கு வசிக்கும் மக்களில் 68.3 சதவீதம் பேர் 'சோம்பேறி'கள்.

5வது இடத்தில் அர்ஜென்டினா 
 
உலக 'சோம்பேறி' நாடுகள் பட்டியலில் 5வது இடத்தில் அர்ஜென்டினா உள்ளது. அர்ஜென்டினா மக்களில் 68.3 சதவீதம் பேர் 'சோம்பேறி'கள்.

6வது 'சோம்பேறி' நாடு மைக்ரோனேசியா 
 
ஆயிரக்கணக்கான தீவுகளை உள்ளடக்கிய நாடான மைக்ரோனேசியா உலகின் 6வது பெரிய 'சோம்பேறி' நாடு. இங்குள்ளவர்களில் 66.3 சதவீதம் பேர் 'சோம்பேறி'கள்.
 
7வது இடத்தில் குவைத் 
 
பணக்கார நாடான குவைத் உலகின் 7வது பெரிய 'சோம்பேறி' நாடு. இந்நாட்டு மக்களில் 64.5 சதவீதம் பேர் 'சோம்பேறி'கள்.

8வது இடத்தில் இங்கிலாந்து 
 
இங்கிலாந்து உலக 'சோம்பேறி' நாடுகள் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து மக்களில் 63.3 சதவீதம் பேர் 'சோம்பேறி'கள்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 9வது இடம் 
 
உலக 'சோம்பேறி' நாடுகள் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 9வது இடம் கிடைத்துள்ளது. இங்குள்ள மக்களில் 62.5 சதவீதம் பேர் 'சோம்பேறி'கள்.

10வது இடத்தில் மலேசியா 
 
உலகின் 10வது பெரிய 'சோம்பேறி' நாடு மலேசியா. மலேசிய மக்களில் 61.4 சதவீதம் பேர் 'சோம்பேறி'கள்.

இந்த பட்டியலில் இந்தியா எப்படி இல்லை? 
உலகின் டாப் 20 'சோம்பேறி' நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 





கருத்துரையிடுக Disqus

 
Top