0
 
வருடா வருடம், புத்தாண்டு சபதமாக, மும்பை பகுதியில், "துப்புவதற்கு குட்பை சொல்வோம்' என்ற சபதத்தை ஏற்பர். இருந்தாலும், இரண்டு நாட்களிலேயே அந்த சபதத்தை மறந்து விடுவர்!

சமீபத்தில், புவனேஸ்வர் ரயில் நிலையத்தில், பிளாட்பார்மில் துப்பியவர்களுக்கு உடனடியாக, 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. வடக்கு கடற்கரை ரயில்வேயில் புவனேஸ்வர் முக்கிய, "ஏ' நகரம். "ஏ' நகரம் என்றால், 100 ரூபாய் அபராதம். கட்டக், பெர்காம்பூர் போன்ற ரயில் நிலையங்கள், "பி' யில் வருகின்றன. இங்கு, 50 ரூபாய் அபராதம். மற்ற நகரங்கள், "சி' கிரேடு உள்ளவை. இங்கு, 30 ரூபாய்.

இந்த கடுமையான சட்டத்தை தமிழக ரயில் நிலையங்களில் உடனடியாக அமல்படுத்தி, துப்பலுக்கு தமிழக ரயில்வேயும் குட்பை சொல்லலாமே... இதன் மூலம் மக்களுக்கும் ஒரு சுய கட்டுப்பாடு வரும்

கருத்துரையிடுக Disqus

 
Top