0
கண்டிப்பாக பார்க்க வேண்டியவை
ராஜபாட்டை அல்லது ராஜவீதி என்ற அர்த்தத்தில்தான் இந்த ராஜ்பாத் சாலை அழைக்கப்படுகிறது. ராஷ்டிரபதி பவனில் துவங்கி விஜய் சௌக் மற்றும் நேஷனல் மியூசியம் வழியாக இந்தியா கேட் வரை இந்த சாலை நீள்கிறது.
டெல்லி புகைப்படங்கள் - ராஜ்பாத் - விஜய் சௌக் 

குடியரசுதின விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படும் ஸ்தலமாக இந்த ராஜ்பாத் சாலை திகழ்கிறது. இருபுறமும் மரங்கள் புல்வெளிகள் மற்றும் குளங்கள் என்று அற்புதமான காட்சிகளுடன் இந்த அழகிய சாலை வீற்றிருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26ம் நாள் இந்த சாலையில் குடியரசுதினவிழா அணிவகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் முக்கிய தலைவர்களின் இறுதி ஊர்வலங்களும் இந்த சாலையின் வழியே நிகழ்த்தப்படுகின்றன.

ரைஸியானா ஹில் பகுதியிலுள்ள ராஷ்டிரபதி பவன் நோக்கிய இந்த சாலை சென்றாலும், கன்னாட் பகுதியிலிருந்து வரும் சாலைகள் இந்த ராஜ்பாத் சாலையின் வடக்குப்பகுதியில் இணைகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
செக்ரட்டேரியட் கட்டிடங்கள், ராஷ்டிரபதி பவன் எனப்படும் குடியரசுத்தலைவர் மாளிகை, விஜய் சௌக் அல்லது வெற்றி சின்னம் மற்றும் இந்தியா கேட் போன்றவை இந்த சாலையில் அமைந்துள்ள முக்கிய அடையாளங்களாகும்.

இப்படி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாளிகைகள் அமைந்துள்ளதால் இப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்த பகுதியில் தனியே திரிவது சங்கடத்தில் முடியக்கூடும்.

புதுடெல்லி மாநகரத்தை வடிவமைத்த எட்வின் லுட்யென்ஸ் இந்த ராஜ்பாத் சாலைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு பிரதான அம்சமாக அமைத்ததால் தான் இன்று நாம் காணும் கம்பீர ராஜ்பத் சாலை சாத்தியமாகி உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த ராஜ்பத் சாலையை ஒட்டியே உள்ள பல கலையம்சம் நிரம்பிய மாளிகைகளையும் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் என்ற ஆங்கிலேய கட்டிடக்கலை வடிவமைப்பாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

கருத்துரையிடுக Disqus

 
Top