உலகின் பெரும்பாலான நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பயன்படுத்தும் கார்களில் பிரத்யேக வசதிகள், உயர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் என கஸ்டமைஸ் செய்து வாங்கப்பட்டிருக்கின்றன. இந்த செய்தித் தொகுப்பில் உலகின் பல்வேறு நாட்டு அதிபர்கள் மற்றும் தலைவர்களால் பயன்படுத்தப்படும் கார்கள் பற்றிய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.
அதிகாரப்பூர்வ கார்
ஒவ்வொரு
நாட்டை ஆளும் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் ஏராளமான கார்களை
வைத்திருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காரை அதிகாரப்பூர்வமான காராக
பயன்படுத்துகின்றனர். அதுபோன்று, உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்கள்
பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ கார் மாடல் குறித்து தொகுப்பில் காணலாம்.
கேடில்லாக் ஒன்
அமெரிக்க
அதிபர் ஒபாமா கேடில்லாக் ஒன் காரை பயன்படுத்துகிறார். குண்டுவெடித்தால்
கூட சேதமடையாத தொழில்நுட்பத்துடன் இந்த கார் கட்டப்பட்டிருக்கிறது.
இதுதவிர, செயற்கைகோள் இணைப்புடன் கூடிய தொலைபேசியும் உண்டு. அமெரிக்க
புலனாய்வு நிறுவனத்திடம் பயிற்சி பெற்றவர்தான் இந்த காரை ஓட்டுகிறார்.
பென்ஸ் எஸ்600 புல்மேன்
நம்
நாட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கஸ்டமைஸ் செய்து வாங்கப்பட்ட மெர்சிடிஸ்
பென்ஸ் எஸ்600 புல்மேன் காரைத்தான் அதிகாரப்பூர்வ வாகனமாக
பயன்படுத்துகிறார். இந்த கார் உலகின் 90 நாடுகளில் பென்ஸ் நிறுவனத்தால்
விற்பனை செய்யப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பதவி
வகித்தபோது இந்த லிமோசின் ரக கார் வாங்கப்பட்டது.
பென்ஸ் எஸ் கிளாஸ்
ஜெர்மனி
ஜனாதிபதி ஜோசிம் கவுக் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காரை அதிகாரப்பூர்வ
காராக பயன்படுத்துகிறார். இதுதவிர, பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ்
நிறுவனங்களின் கார் மாடல்களும் இவரிடம் இருக்கிறது.
ஜாகுவார் எக்ஸ்ஜே8
இங்கிலாந்தை
தலைமையகமாக கொண்டு செயல்படும் சில காமன்வெல்த் நாடுகளில் நியூஸிலாந்தும்
ஒன்று. இந்த நாட்டின் கவர்னர் ஜெனரல் ஜாகுவார் எக்ஸ்ஜே8 காரை அதிகாரப்பூர்வ
காராக பயன்படுத்துகிறார்.
ஹாங்காங் கவர்னர்
சீன
அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு கவர்னர்தான் ஹாங்காங்கை நிர்வகித்து
வருகிறார். டொயேட்டாவின் லெக்சஸ் பிரிமியம் செடான் கார்தான் அவரது
அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்தப்படுகிறது.
ஜாகுவார் எக்ஸ்ஜே
இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் கேமரூன் ஜாகுவார் எக்ஸ்ஜே காரைத்தான் அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்துகிறார்.
மேபேக் எஸ்62
மலேசியாவின் அரசர் மேபேக் எஸ்62 காரை அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்தி வருகிறார்.
கிளாசிக் டெய்ம்லர் டிஎஸ் 420
சுவீடன் நாட்டின் அரசர் கிளாசிக் டெய்ம்லர் டிஎஸ் 420 காரை அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்துகிறார்.
லான்சியா ஃபிளமினா லிமோசின்
இத்தாலி பிரதமல் ஜார்ஜியோ நபோலிடானோ கஸ்டமைஸ் செய்யப்பட்ட லான்சியா ஃபிளாமினா லிமோசின் காரை அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்துகிறார்.
பென்ஸ் எஸ் கிளாஸ்
ரோமானிய ஜனாதிபதி மற்றும் இதர அதிகாரிகள் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காரை அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்துகின்றனர்.
சிங்கப்பூர் ஜனாதிபதி டான் கெங் யாம் டோனி
சிங்கப்பூர் ஜனாதிபதி மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்350எல் காரை அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்துகிறார்.
பென்ஸ் எஸ்600 புல்மேன்
கென்ய அதிபர் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 புல்மேன் காரை பயன்படுத்துகிறார்.
கேலக்ஸி எக்ஸ்எல்
சிலி
அதிபர் ஃபோர்டு நிறுவனத்தின் கேலக்ஸி எக்ஸ்எல் காரை அதிகாரப்பூர்வ காராக
பயன்படுத்துகிறார். இது கன்வெர்ட்டிபிள் கார் என்பதால் அதிபரின்
பாதுகாவலர்கள் எந்த நேரமும் கூடுதல் கண்காணிப்பையும், பாதுகாப்பையும் வழங்க
வேண்டியது அவசியம்.
பென்ஸ் எஸ் கிளாஸ்
குரோஷிய அதிபர் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காரை அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்துகிறார்ய
கருத்துரையிடுக Facebook Disqus