இது குறித்து, திட்ட ஒருங்கிணைப்பாளர்,ரோமின் கூறியதாவது:பிளாஸ்டிக் பாட்டில்களால் உருவாக்கப்படும்பசுமை வீடுகள், மிகவும் பாதுகாப்பானவை.1,560 ஆண்டுகள் வரை சேதாரமின்றி உறுதியாகஇருக்கும். இதற்கு தேவையான, காலி பிளாஸ்டிக்பாட்டில்கள், சென்னையில் உள்ள நட்சத்திரஓட்டல்கள், திருமண மண்டபங்கள், பொதுவிழாக்கள் நடைபெறும் இடங்களில் இருந்து,ஒரு மாதத்தில், ஏழு லட்சம் காலி பாட்டில்களைபெற்றோம்.
அவற்றை அளவுக்கு ஏற்ப பிரித்து; சவுடு மண்,சாலையோரங்களில் குவிந்து கிடக்கும் வீணானமண் ஆகியவற்றை கொண்டு நிரப்பி, பாட்டிலைஉறுதியாக்கி, கட்டட பணிக்கு பயன்படுத்துகிறோம்.பாட்டிலின் தட்டையான பின்பகுதியைசுவரின் வெளிப்புறம் மற்றும் தரை தளத்தில்இருப்பது போல் பயன்படுத்தினால், "சம நிலையில்' இருக்கும். மூடியிருக்கும் மேல்பகுதி"மாற்றி யோசித்தால்' பிளாஸ்டிக் கழிவு "பசுமை' வீடாகும்!உட்புறத்தில் இருக்கும். இதனால், சுவரை,சிமென்ட் மூலம் எளிதாக பூச முடியும்.செங்கல் வாங்கும் செலவை தவிர்க்கலாம்.அதே போன்று, சிமென்ட் வாங்கும் செலவும் பாதியாக குறையும்.
மேற்கண்ட வீடு,மழை மற்றும் குளிர் காலத்தில் கதகதப்பாகவும், கடுமையான கோடை காலத்தில்குளிர்ச்சியாகவும் இருக்கும். இது போன்றபசுமை வீட்டை, டில்லியில், பள்ளி கட்டடமாக கட்டி கொடுத்துள்ளோம். 15 அடிநீளம், 12 அடி அகலம் கொண்ட வீடு கட்ட,30 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும்.இங்கு, 2,400 சதுர அடி பரப்பளவில் தரைதளத்துடன், கூடுதலாக ஒரு மேல் தளமும்கொண்ட கட்டடத்தை கட்ட உள்ளோம்.அதற்கான தூண் மேல் தளத்தின் அழுத்தத்தை தாங்குமா என்பதை அறிய ஐ.ஐ.டி.,மூலம் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு உள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற பசுமை வீடுகளின் மேல் தளத்தில், சூரிய மின் சக்தி உருவாக்கும் வகையில் கூரைகள் அமைக்கும்திட்டமும் பரிசீலனையில் உள்ளது.மேலும், பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம்,பள்ளி, கல்லூரி, மருத்துவமனை சுற்றுச்சுவர், நடைமேடைகள் மற்றும் பொதுக்கழிப்பிடங்கள் கட்டலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துரையிடுக Facebook Disqus