0
நீங்கள் பார்க்கவிருப்பது சாதாரண 'சொத்தை' அலுவலகங்கள் அல்ல. இங்கே வேலைசெய்தால் 'வாழலாம்டா' சாமி! என பிரம்மிக்கவைக்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள். இதில் நாங்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை சேர்க்கவில்லை என தெளிவாக குறிப்பிடுகிறோம். ஆதலால் பின்னூட்டங்களில் திட்டவேண்டாம்.

பின்வரும் 'டெக்' அலுவலகங்கள் தங்களது பணியாளர்களை சாதாரணமாக நடத்துவதில்லை. மிகவும் அருமையான சூழலை உருவாக்கி, 'எனக்கு அங்கதான் வேலைசெய்ய ஆசை' என சொல்லவைப்பவை.

அலுவலகத்திலேயே ஜிம், வேலைப்பளுவை குறைக்க பல்வேறு முயற்ச்சிகள், மற்றும் பல்வேறு சிறப்புகளைகொண்டவை. சில தகவல்களை மட்டும் படங்களுடன் வெளியிட்டுள்ளோம். நீங்களே பாருங்கள், பொறாமை பட்டுக்கோங்கப்பா!!

உலக அளவிலான ஒரு பார்வை!

ஏர்பின்ப்[Airbnb]

பல்வேறு சிறப்பம்சங்களைக்கொண்ட இந்நிறுவனத்தில் குறிப்பிடும்படியான சிறப்பு என்னவெனில்,

இந்நிறுவனமானது முழுவதும் மரத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு 'மர வீடு' என்றே சொல்லலாம். மிகவும் அருமையான வடிவமைப்புத்தரம். இங்கே வேலைசெய்தாலே நிம்மதிகிடைக்கும் எனலாம்.

ப்ளூம்பெர்க்:

சிறப்பான 'டெக்' நிறுவனம். இதன் தலைமை அலுவலகத்தில் ESCALATORS என அழைக்கப்படும் நகரும் படிகள் உள்ளதல்லவா? அவற்றை வளைவுகளுடன் அமைத்திருக்கிறார்கள். இதுபோன்ற வடிவுடன் உலகிலேயே 2 சாதனங்கள்தான் உள்ளதாம்.

மேலும் இந்நிறுவனத்தில் அழகாக வடிவமைக்கப்பட்ட கணினிகள், நியான் ஒளிவிளக்குகள், ATM சாதனங்கள், 'ஸ்நாக்ஸ்' பெறுவதற்கான சாதனம் என அத்துணை தொழில்நுட்பங்களும் கொட்டிக்கிடக்கின்றனவாம்.

எட்சி:

இந்த நிறுவனத்தின் அலுவலம் மொத்தமும் ஓவியங்களால் அலங்கரிக்கபட்டிருக்கும். அலுவலகத்தில்தான் வேலைசெய்கிறோமா என்ற உணர்வினை ஏற்படுத்துமாம்.

ஃபேப்ஸ் பங்கி:

இதன் நியூயார்க் தலைமை அலுவலகமானது முழுவதும் வண்ணமயமாக, ஒரு அழகோவியமாக காட்சியளிக்கிறது. நீங்களே பாருங்கள், இவர்கள் அமர்ந்திருப்பது ஒரு ஓவியக்கூடம் போலல்லவா காட்சிதருகிறது! ஆனால் அது அலுவலகம் என்பது பலருக்கு கடுப்பை ஏற்படுத்தியிருக்குமே!

ஃபேஸ்புக்:

அமெரிக்காவின் மென்லோ பார்க்கில் உள்ள தனது புதிய அலுவலகத்தை வடிவமைப்பதற்காக கோடிகளை இறைத்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். இதற்கான வடிவமைப்பு மிகவும் பிரபலமான கலைஞர்களை வைத்து செதுக்கியிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

நீங்கள் பார்க்கும் இந்த படமானது ஃபேஸ்புக் அலுவலகத்தின் 'கான்டீன்' மட்டுமே என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

கவ்கர் அலுவலகம் :

பார்ப்பதற்கு வசதியான வீடுபோல தோற்றமளிக்கும் இந்த அலுவலகத்தில் வேலைசெய்ய யாராவது தயங்குவார்களா?

மேலும் இந்த நிறுவனம் வாராவாரம் பார்ட்டியெல்லாம் நடத்துதாம்!

கூகுள் அலுவலகம்:

கூகுள் பற்றிச்சொல்லவே வேண்டாம். பார்த்தாலே அமைதித்தன்மை தோன்றுகிறதல்லவா? இங்க வேலை செய்யறவங்கல்லாம் வாழ்றாங்கப்பா!

குரூப்பன்:

வேலைசெய்வதற்கு மிகவும் சிறப்பான நிறுவனம் என்று பலராலும் அழைக்கப்படும் இந்நிறுவனத்தில் ஒவ்வொரு பணியாளருக்கும் சிறப்பான வசதிகள் செய்துதரப்படுகின்றன. பணியாளர் அதிகமாக யோசிப்பவர் என்றால், அவரின் கற்பனைக்கேற்ப தனியாக படுக்கையறையுடன் கூடிய ரூம் தருவார்களாம்.

சீம்லெஸ்:

இதுதான் சீம்லெஸ் நிறுவனத்தின் புதிய நியூயார்க் அலுவலகம். படத்திற்கும் மேல் சொல்வதற்கு எதுவுமில்லை. அப்படியொரு சிறப்பான அலுவலகம்.

ஸ்கைப்:

புகழ்பெற்ற நிறுவனமான இதன் அலுவலகமானது, முழுவதும் 'நீல' நிறத்தில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இதுவொரு மாடர்ன் அலுவலகம்.

டம்ப்ளர்:

இந்தியர்கள் பெரும்பாலும் இதை பயன்படுத்துவதில்லை. ஆனாலும் ஏனைய நாடுகளில் மிகவும் பிரபலமானது. இந்நிறுவனமும் வீடுபோன்ற உணர்வினை ஏற்படுத்தும். இந்த அலுவலகத்தில் பல்வேறு வகையான விளையாட்டுக்கள் உள்ளன.

வெண்டி பிரிவி:

வேலைசெய்ய சிறந்த அலுவலகங்களின் பட்டியலில் இந்நிறுவனம் 4ஆம் இடத்தை பிடித்திருக்கிறதென்றால் இதன் தரத்தை நீங்களே நிர்ணயித்துக்கொள்ளுங்கள்.

வோஸ்டுஸ் புனோஸ்:

இந்நிறுவனம் அமெரிக்க அதிபரின் அலுவலகத்தின் பக்கத்திலேயே இருப்பது சிறப்பு. மேலும் வேலைசெய்வதற்கான அருமையான சூழலை இந்நிறுவனம் ஏற்படுத்தித்தரும்.

ஜொக் டாக்:

இந்நிறுவனத்தின் சுவர்களில் கார்ட்டூன் வரைவதற்காகவே ஒரு கலைஞர் இருப்பது கூடுதல் சிறப்பு. வேலைசெய்வதற்கு அருமையான சூழல்.

ஜிங்கா:

உலக அளவில் உள்ள 'டெக்' நிறுவனங்களிலேயே இதுதான் முதலிடத்தில் உள்ளது. அப்படியானால் இதில் வேலைசெய்யவே வேண்டியதில்லையா? என்றெல்லாம் கேட்கவேண்டாம்!

இதுவொரு இணைய விளையாட்டுகளை உருவாக்கும் நிறுவனம். இதில் 1,700 பணியாளர்கள் பணிபுரிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக Disqus

 
Top