0
 Gold Etfs What Are The Advantages And Disadvantages
பொதுவாக நமக்கு தங்கம் என்றால் நினைவிற்கு வருவது தங்க நகைகள், தங்க நாணயங்கள் மற்றும் தங்க கட்டிகள். ஆனால் தங்கம் இ.டி.எஃப். என்று ஒன்று இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?

தங்கம் இ.டி.எஃப். என்பதை ஒரு பரஸ்பர நிதியாக கருதலாம். நாம் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயும் தங்கத்தில் முதலீடு செய்யப்படும். இந்த தங்கத்தில் நாம் வாங்கிய ஒவ்வொரு யூனிட்டும் ஒரு கிராம் தங்கதிற்கு ஈடானது. மேலும் தங்கத்தின் தரம் 99.5 சதவீதம் சுத்தமானதாகும். இந்த தங்கத்தின் மதிப்பு வர்த்தக நிலையை பொறுத்து மாற்றம் அடையலாம்.

இந்த தங்கம் இ.டி.எஃப். வாடிகையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்றே கூறலாம். முதலீட்டாளர்கள் தங்கத்தை நகைகளாக அல்லது நாணயங்களாக முதலீடு செய்வதை விட இதில் முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

இதில் அப்படி என்ன நன்மைகள் இருக்கிறது?
தங்கம் இ.டி.எஃப். மூலம் தங்கத்தை சிறுக, சிறுகச் சேமிக்கலாம். அது நம் பணி ஒய்வு மற்றும் திருமணம் உள்ளிட்ட வருங்கால தேவைக்காக பயன்படும்.
வாங்கவோ அல்லது விற்கவோ மிகவும் எளிதானது.

மிகவும் கவரகூடிய விஷயம் என்னவென்றால் தங்கம் இ.டி.எஃப்.- இல் வாட் மற்றும் சேவை வரி அல்லது சொத்து வரியோ கிடையாது.

நாணயங்கள் அல்லது கட்டிகள் வடிவ தங்கம் நீண்ட கால மூலதன ஆதாயங்களை அடைய 3 ஆண்டுகள் தேவை. ஆனால் தங்கம் இ.டி.எஃப்.-இல் நீண்ட கால மூலதன ஆதாயங்களை அடைய 1 ஆண்டே போதுமானது.
தங்கம் திருட்டு பயம் கிடையாது.

வங்கி பெட்டகம் போன்றவற்றிற்கு செலவிட தேவை இல்லை.

குறைகள்
நகைகள் அல்லது நாணயங்கள் வடிவில் உள்ள தங்கத்தை விட இந்த இ.டி.எஃப்.-ன் ஒரு யூனிட் விலை சற்று அதிகமாக இருக்கும். மேலாண்மை கட்டணங்கள் மற்றும் தரக கட்டணங்கள் இந்த இ.டி.எப் மீது வசூலிக்கப்படுவது தான் அதிக விலைக்கு காரணம்.

அரசாங்கம் நடப்பு கணக்கு பற்றாக்குறையில் உள்ள அழுத்தத்தை தொடர்ந்து தங்கத்தின் இறக்குமதியை ஊக்குவிப்பதில்லை. ஆகையால் வரும் காலங்களில் தங்கம் இ.டி.எஃப். மிகவும் பிரபலமாக வாய்ப்பு உள்ளது என்றும் கூறலாம் .

கருத்துரையிடுக Disqus

 
Top