0
இப்படியும் தூங்கலாம் !

v வரிக்குதிரை நின்றுக்கொண்டே தூங்கும்.

v பாம்புகள் கண்களைத்திறந்துக் கொண்டே கூட தூங்கும்.

v கடல் புறாக்கள் நீரில் மிதந்துக்கொண்டே தூங்கும்.

v குரங்குகள் மரத்தில் தொங்கியபடியே தூங்கும்.

v டால்பின்கள் ஒரு கண்ணை மட்டும் திறந்துக்கொண்டே தூங்கும்.

v குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும்.

v ராபின் இனப்பறவை பாடிக்கொண்டே தூங்கும்.

v கோழிகள் நின்றுக்கொண்டே தூங்கும்.

v வாத்துக்கள் நீரில் வட்டமடிதுக்கொண்டே தூங்கும்.

v மாடுகள், ஒட்டகங்கள் அசைப்போட்டுக்கொண்டே தூங்கும்.

v நீங்க எப்படி......?!

இப்படியும் சொல்லலாம்...


அதிகாரி :
நாம் எப்போதாவது தாமதமாகப் போனால் முன்னாடியே வருபவர்; நாம் சீக்கிரமாகப் போனால் தாமதமாக வருபவர்.


அணுகுண்டு :
கண்டுபிடிப்புகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவரும் கண்டுபிடிப்பு.


கமிட்டி :
தனியாக ஒன்றும் செய்ய முடியாதவர்கள் கூட்டாகச் சேர்ந்து ஒன்றும் செய்யாமலிருப்பது.


அனுபவம் :
தங்களின் தவறுகளுக்கு மனிதர்கள் வைத்த பெயர்.


சந்தர்ப்பவாதி :
தெரியாத்தனமாக ஆற்றில் விழுந்தாலும் குளிக்கத் துவங்கிவிடுவர்.

குற்றவாளி :
இவரும் எல்லோரையும் போலதான்; என்ன வித்தியாசம், இவர் மாட்டிக்கொண்டவர்.


கான்பரன்ஸ் அறை :
எல்லோரும் பேசி எல்லோரும் கவனிக்காமல் இறுதில் யாருமே முடிவுக்கு வர முடியாத இடம்.

கருத்துரையிடுக Disqus

 
Top