0
4 Reasons Why Gold Investors Have Be Patient


இந்த சூழ்நிலையில் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். இது ஏன் என்பதற்கு நான்கு காரணங்களை இங்கு பார்க்கலாம்.

1. பங்குச் சந்தையில் பணம்:
முதலீட்டாளர்கள் தங்கத்தை பங்குகளைப் போலவே பார்த்தனர். தங்கத்தில் உடனடி லாபம் குறைந்தவுடன் பங்குச் சந்தைக்கு அவர்களின் முதலீட்டை மாற்றிவிட்டனர். இந்திய பங்குச் சந்தை எப்போதும் சர்வதேச பங்குச் சந்தைகளைச் சார்ந்து இருப்பதனாலும், சர்வதேச பங்குச் சந்தையில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி போன்ற பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் இருப்பதனாலும், தங்கத்தின் விலை உயர்வை விடப் பங்குகள் நல்ல லாபத்தைத் தருவதாலும் முதலீட்டாளர்கள் பலரும் தங்கத்தை விற்று பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றனர். காலப்போக்கில் பங்குச் சந்தையில் பெரிய ஏமாற்றம் இருப்பின் தங்கத்தின் மார்க்கெட் ஒரு பாதுக்காப்பு முதலீடாகக் கருதி தங்கம் வாங்கப்படுமே தவிர வேறு முதலீட்டு வாய்ப்புகள் குறைவே.

2. தங்கத்தின் மவுசு குறைகிறது:
இன்றைய காலத்தில் நம் நாட்டுப் பெண்களே தங்கத்தை விரும்புவதில்லை. சர்வதேச அளவிலும் தங்கத்தின் தேவை குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தங்கக் கட்டி, தங்கக் காசுகள் ஆகியவற்றின் தேவை 17 சதவீதமும், ஆபரணத் தங்கம் 3 சதவீகதமும் குறைந்துள்ளது. தங்கத்தின் கொள் அளவும் குறைந்தே இருக்கிறது.

3. இந்திய அரசின் திட்டம்:
இந்தியாவில் கச்சா எண்ணெய் தான் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. அதற்கு பிறகு தான் தங்க இறக்குமதி. இறக்குமதி கட்டணம் அமெரிக்க டாலர்களாக கொடுக்க வேண்டியது உள்ளது. இது நமது நாட்டின் பண வீக்கத்தைப் பாதிப்பதால் இந்திய அரசு தங்கத்தின் விலையை ஏற்ற, தங்கத்தின் இறக்குமதியின் மேல் விதிக்கப்படும் இறக்குமதி வரியை உயர்த்துள்ளது. இதனால் தங்க விலை உயர்ந்துள்ளது.

4. தங்க இ.டி.எஃப் விற்பனை:
பிப்ரவரி மாதத்தில் மட்டும் 4.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள பணம் இ.டி.எஃப்பை விற்பனைச் செய்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் இவ்வளவு பெரிய தொகையை தங்க இ.டி.எஃப்பை கவனிக்கு ஒரு நிறுவனத்தில் இருந்து எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்க ஒன்று. அதே நேரத்தில் பங்குச் சந்தையில் முதலீடுகள் கூடிக்கொண்டே போகின்றன. இந்த விற்கப்பட்ட இ.டி.எஃப்-கள் பங்குச் சந்தையில் தங்கத்தின் மதிப்பைக் குறைத்துள்ளது.

இவை அனைத்தையும் பார்க்கும் போது, தங்கம் குறுகிய காலத்தில் பலன் தராது என்பது உறுதியாகத் தெரிகிறது. ஆகவே, தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் காத்திருப்பது அவசியம்.

கருத்துரையிடுக Disqus

 
Top