0
வானைத் தொடும் மிக மிக உயரமான கட்டிடங்களை அண்ணாந்து பார்த்து அதிசயிப்பதுதான் பொதுப்புத்தி. இதற்கு அப்பால் இப்படி மிக மிக உயரமான கட்டிடங்கள் மீது ஏறி உச்சியில் நின்று உலகையே பார்க்கும் சாகசத்தை கொஞ்சம் நினைச்சுப் பாருங்க.. 
 
50 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அண்ணா சாலையில் 14 மாடிகளுடன் நிமிர்ந்து நிற்கும் எல்.ஐ.சி.தான் மிக உயரமான கட்டிடம். தமிழ் சினிமாவின் சென்னையின் பிரதான அடையாளம் ஒன்றாக திகழ்ந்தது இந்த எல்.ஐ.சி. கட்டிடம். தற்போது சென்னையிலேயே இதைவிட பிரம்மாண்ட கட்டிடங்கள் விண்ணை முட்டும் வகையில் வளர்ந்துவிட்டன. 14 மாடிக்கே ஆ! என வாயை பிளக்கிற நமக்கு மாடியின் உச்சியின் கைப்பிடி சுவரின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டு கீழே பார்த்தாலே தலை கிறுகிறுக்கும்.. 
 
ஆனால் இதைவிட மிக மிக உயரமான பலமாடிகளில் சர்வசாதாரணமாக ஏறி மிரளச் செய்யும் சாகசங்களை துளியும் பயமின்றி ஒரு பெண் செய்து கொண்டிருக்கிறார். அவர் இப்படி செய்வதை புகைப்படங்களாக எடுத்து தள்ளி இணையதளத்தில் வெளியிட்டும் இருக்கிறார்.
 
அம்மாடியோவ்! என்ன பாஸ்! 
இந்தப் படம் டுபாக்கூரா இருக்குமோ என நினைக்கிறீர்களா? நிச்சயம் இல்லை.. பாஸ். தென் கொரியாவைச் சேர்ந்த நடிகை அன் ஜூன்தான் இந்த 'சாகச' புகைப்படத்துக்கு சொந்தக்காரர்.. சியோல் நகரத்து உயரமான கட்டிடங்களைப் பார்த்தால் போதும் அம்மணிக்கு.. இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறார்
 
சும்மா ஜாலியா சின்னதா ...  
இந்தப் புகைப்படத்தின் எதிரே தெரியும் இரண்டு மலை முகடுக்கு இணையாக உயரமான கட்டிடம்.. அந்தக் கட்டிடத்தின் கைப்பிடிச் சுவரின் மீது ஏறிக் கொண்டு ஒற்றைக்காலில் நின்று பார்க்கிறார்...
 
 கரணம் தப்பினால்..மரணம்தான்..! சாகச ராணிக்கு என்னவோ இதெல்லாம் சும்மா. இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடுற படத்தைப் பாருங்கள்..

 
தம்மாத்தூண்டு சுவரு.. 
படத்தை பார்க்கும் நமக்கே தலை கிறுகிறுக்குதே... இவருக்கு ஒன்னுமே செய்யலையாம்! இதையெல்லாம் விட அடுத்த படத்தைப் பாருங்க..


விளையாட இடமே இல்லை..  
இந்தப் படத்துக்கு எந்த கருத்துமே இல்லைங்க...நீங்க நினைக்கிறதுதான் கருத்து..
 
இது 10 வருஷத்துக்கு முன்பு 10 ஆண்டுகளுக்கு முன்பு 
சீனாவின் பெய்ஜிங்கை சேர்ந்த நடிகர் லீ வெய்தான் இப்படி கூத்தடித்து பீதி கிளப்பியிருந்தார். ஹலோ! நீங்க எங்கேயும் கிளம்பிடாதீங்க...மனசை தன்னம்பிக்கையாக வைக்கத்தான் இந்த ஸ்டோரி.. பிராக்டிஸ் பண்றதுக்கு அல்ல...

 


 


கருத்துரையிடுக Disqus

 
Top