இஸ்ரேலுக்கு சுற்றுப் பயணம் சென்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவின் லிமோசின்
காரில் டீசலுக்கு பெட்ரோல் நிரப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியிருக்கிறது. மிகுந்த பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கையுடன் ஒபாமா
பயணங்களை அமெரிக்க புலனாய்வு அமைப்பு(எஃப்பிஐ) கையாண்டு வருகிறது. இந்த
நிலையில், ஒரு சாதாரண விஷயத்தில் எஃப்பிஐ கோட்டை விட்டிருப்பது அனைவரையும்
வியப்பிலும், அமெரிக்கர்களை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது.
மேலும், சத்தம் போடாமல் அந்த காரை ஒரு டிரக்கில் ஏற்றி எஃப்பிஐ அதிகாரிகள்
கொண்டு சென்றுள்ளனர். ஆனால், விஷயம் எப்படியோ வெளியில் தெரிந்து விட்டதால்
இந்த விஷயத்தை தற்போது எஃப்பிஐ ஒப்புக்கொண்டுள்ளது. வேறு ஒரு மாற்றுக்
காரில் ஒபாமா பயணத்தை தொடர்ந்துள்ளார்.
இதுபோன்று, டீசல் காரில் பெட்ரோலை தப்பி தவறி நிரப்பிவிட்டால், காரை
ஓட்டிச் செல்ல வேண்டாம். விஷயம், தெரிந்துவிட்டால் கார் எஞ்சினை கண்டிப்பாக
ஸ்டார்ட் செய்ய வேண்டாம். அப்படி, தெரியாமல் காரை ஸ்டார்ட் செய்து
செல்லும்போது எஞ்சின் பம்பில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில்,
பெட்ரோல் கார்களை விட டீசல் கார்களின் பம்புக்கு அதிக உயவு தேவைப்படும்.
காரில் இருக்கும் டீசலுடன் பெட்ரோல் சேரும்போது அது பசைத் தன்மை
அதிகரித்துவிடும். இரண்டும் சேர்ந்த கலவை எஞ்சினுக்குள் படியத் துவங்கினால்
பிரச்னை ஏற்படும். பம்புகள், எஞ்சின் பாகங்களுக்கு இடையில்
பொருத்தப்பட்டிருக்கும் சீல் பட்டைககள் பாதித்துவிடும்.
ஒருவேளை,
தெரியமாலேயே காரை ஓட்டிச் சென்று பிரச்னை ஏற்படும்.
எனவே, பிரச்னை ஏற்பட்டுவிட்டால், அருகிலுள்ள சர்வீஸ் சென்டருக்கு கொண்டு
சென்று முழுவதுமாக எரிபொருளை வெளியேற்றிவிட வேண்டும். மேலும், பெட்ரோலை
முழுவதுமாக வெளியேற்றிய பின் காரின் ஃபில்டர், இன்ஜெக்டர்கள், பம்புகள்,
சீல் பட்டைகளை மாற்ற வேண்டியது அவசியம். இதற்கு அதிக செலவாகலாம். எனவே,
காருக்கு எரிபொருள் நிரப்பும்போது பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் பெட்ரோலா,
டீசலா என தெரிவித்து விடுவது அவசியம். மேலும், டேங்க் அருகில் ஸ்டிக்கர்
ஒன்றை ஒட்டி வைப்பதும் நலம்.
கருத்துரையிடுக Facebook Disqus