0

நம்மில் நிறைய நண்பர்கள் ஆயக்கலைகள் 64
என்று சொல்கிறார்கள் அது என்ன வென்று நிறைய நண்பர்களுக்கு தெரியாது . அப்படியே யாரிடமாவது கேட்டால் அதற்க்கு சிலர் அவர்களுக்கு தெரிந்ததை சொல்லுவார்கள் . கீழே குறிப்பிட்டு உள்ளது தான் இந்த ஆயக்கலைகள் 64

1. எழுத்திலக்கணம் ஃ அட்சரங்கள் ஃ பிற மொழி பயிலல் (அகரவிலக்கணம்);
 

2. எழுத்தாற்றல் (லிகிதம்) ஃ யாப்பறிவு;
 

3. கணிதம்; பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை
 

4. மறைநூல் (வேதம்);
 

5. தொன்மம் (புராணம்);

6. இலக்கணம் (வியாகரணம்);
 

7. நயனூல் (நீதி சாஸ்திரம்);
 

8. கணியம் (ஜோதிட சாஸ்திரம்);
 

9. அறநூல் (தர்ம சாஸ்திரம்);
 

10. யோக நூல் (யோக சாஸ்திரம்);
 

11. மந்திர நூல் (மந்திர சாஸ்திரம்);
 

12. நிமித்திக நூல் (சகுன சாஸ்திரம்);
 

13. கம்மிய நூல் (சிற்ப சாஸ்திரம்);
 

14. மருத்துவ நூல் (வைத்திய சாஸ்திரம்); உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
 

15. உறுப்பமைவு நூல் (உருவ சாஸ்திரம் ஃ சாமுத்ரிகா லட்சணம்);
 

16. மறவனப்பு (இதிகாசம்);
 

17. வனப்பு (காவியம்);
 

18. அணிநூல் (அலங்காரம்); ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்); சங்குமுதலியவற்றாற் காதணியமக்கை; மாலைதொடுக்கை; மாலை முதலியன் அணிகை; இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை; அணிகலன் புனைகை; ஆடையுடைபற்களுக்கு வண்ணமமைக்கை; ஓவியம்;
 

19. மதுரமொழிவு (மதுரபாடணம்); உரிச்சொல்லறிவு (நிகண்டு 19. மதுரமொழிவு (மதுரபாடணம்); உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி)
 

20. நாடகம் ஃ கூத்து; பிதிர்ப்பா (கவி) விடுக்கை; குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்); நாடகம் உரைநடை (வசனம்); நடம் (நடனம்); நிருத்தம்
 

21. பாட்டு (கீதம்);
 

22. ஒலிநுட்ப அறிவு (சப்தப்பிரம்மம்); குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
 

23. மனைநூல் (வாஸ்து வித்தை); தோட்டவேலை; மரவேலை; பிரம்பு முத்தலியவற்றாற்கட்டி­ல் பின்னுதல்; பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்; பள்ளியறையிலும்குடிப்­பறையிலும் மணி பதிக்கை;
 

24. யாழ் (வீணை); குழல் ஃ புல்லாங்குழல் வாசிப்பு;
 

25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை; தையல்வேலை;
 

26. மதங்கம் (மிருதங்கம்); தாளம் ஃ இன்னியம் (வாத்தியம்); சுவைத்தோன்றப் பண்ணுடன்வாசிக்கை; நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
 

27. விற்பயிற்சி ஃ ஆயுதப் பயிற்சி (அத்திரவித்தை);
 

28. பொன் நோட்டம் ஃ தங்கம் பற்றி அறிதல் (கனகப்பரீட்சை);
 

29. தேர்ப்பயிற்சி (ரதப்ப்ரீட்சைஃ ரத சாஸ்திரம்); பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை
 

30. யானையேற்றம் மற்றும் சாதி அறிதல் (கச பரீட்சை);
 

31. குதிரையேற்றம் மற்றும் சாதி அறிதல் (அசுவ பரீட்சை);
 

32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
 

33. நிலத்து நூல் ஃ மண்ணியல் (பூமி பரீட்சை);
 

34. போர்ப்பயிற்சி ஃ போர்முறை சாஸ்திரம் மற்றும் தந்திரம் (சங்கிராமவிலக்கணம்);
 

35. மல்லம் (மல்யுத்தம்);
 

36. கவர்ச்சி (ஆகருடணம்);
 

37. ஓட்டுகை (உச்சாடணம்);
 

38. நட்புப் பிரிப்பு ஃ பகைமூட்டுதல் (வித்துவேடணம்); பொறியமைக்கை;
 

39. காமம் (காம சாஸ்திரம்);
 

40. மயக்குநூல் (மோகனம்);
 

41. வசியம் (வசீகரணம் ஃ ஆகரஷனம்);
 

42. இதளியம் (ரசவாதம்); நெருட்டுச் சொற்றொடரமக்கை; ஈற்றெழுத்துப் பாப் பாடுகை; விடுகதை (பிரேளிகை);
 

43. கந்தரவ ரகசியம்; ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்); இருகாலிற் கொள்கைதுவிசந்தக்கிரா­கித்வம்)
 

44. பிறவுயிர் மொழியறிகை ஃ மிருக பாஷை அறிதல் (பைபீல வாதம்); கிளி நாகணங்கட்குப்பேச்சுப் பயிற்றுவகை;
 

45. மகிழுறுத்தம் ஃ துயரம் மாற்றுதல் (கவுத்துக வாதம்);
 

46. நாடிப்பயிற்சி ஃ நாடி சாஸ்திரம் (தாது வாதம்);
 

47. கலுழம் ஃ விஷம் நீக்கும் சாஸ்த்திரம் (காருடம்);
 

48. இழப்பறிகை ஃ களவு (நட்டம்);
 

49. மறைத்ததையறிதல் ஃ மறைத்துரைத்தல் (முஷ்டி);
 

50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்); வான்செலவு ஃ விண் நடமாட்டம் (ஆகாய கமனம்);
 

51. உடற் (தேகப்) பயிற்சி;
 

52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
 

53. தன்னுருக்காத்தல் (அதிருசியம்ஃ அரூபமாதல்);
 

54. மாயச்செய்கை (இந்திர ஜாலம்);
 

55. பெருமாயச்செய்கை (மகேந்திர ஜாலம்);
 

56. அழற்கட்டு (அக்னி ஸ்ம்பனம்);
 

57. நீர்க்கட்டு (ஜல ஸ்தம்பனம்);
 

58. வளிக்கட்டு (வாயு ஸ்தம்பனம்);
 

59. கண்கட்டு (திருஷ்டி ஸ்தம்பனம்);
 

60. நாவுக்கட்டு (வாக்கு ஸ்தம்பனம்);
 

61. விந்துக்கட்டு (சுக்கில ஸ்தம்பனம்);
 

62. புதையற்கட்டு (கன்ன ஸ்தம்பனம்);
 

63. வாட்கட்டு ஃ வாள்வித்தை (கட்கத்தம்பனம்);
 

64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்) ஃ சூதாட்டம் ஃ சொக்கட்டான் ஃ கைவிரைவு ஃ ஹஸ

கருத்துரையிடுக Disqus

 
Top