கொடைக்கானல் ஏரி,
செயற்கை ஏரியான கொடைக்கானல்
ஏரி ஒரு விண்மீனின் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கும். 1863-ஆம் வருடம்
கட்டப்பட்ட இந்த ஏரி மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
பேருந்து நிலையத்திலிருந்து 0.5 கி.மீ. தொலைவில் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இந்த ஏரி. ஏரியை ஒட்டியே சில படகு துறைகளும் காணப்படுகின்றன. அவை படகு சவாரி செய்ய துடுப்பு படகுகள் மற்றும் மிதிக்கட்டை படுகுகளும் வாடகைக்கு விடுகின்றன.
இது போக குதிரை சவாரி மற்றும் மிதிவண்டி பயணம் செய்ய குதிரை மற்றும் மிதிவண்டிகள் வாடகைக்கு கிடைக்கும். ஏரியின் கரையை சுற்றி 5 கி.மீ. தூரத்திற்கு நடை பாதை அமைக்கப்பட்டிருப்பதால் இங்கு நடை பயணமும் மேற்கொள்ளலாம்.
இது உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. ஊருக்குள் ஓய்வெடுக்க இந்த ஏரி ஒரு சிறந்த இடம்.

பியர் ஷோலா நீர்வீழ்ச்சி
பியர் ஷோலா நீர்வீழ்ச்சி காப்புக் காட்டினுள் அமைந்துள்ளது. இந்த உயரமான
நீர்வீழ்ச்சி பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த
அருவி இப்பெயர் பெறக்காரணம், முன்னாட்களில் கரடிகள் இங்கே தண்ணீர் பருக
வந்து செல்லுமாம். மிகவும் அமைதி சூழ்ந்த அழகான இடம் இது.
இந்த அருவியை வந்தடைய கூறிய நடைபாதையில் ஏறிச் செல்ல வேண்டும். இயற்கை
விரும்பிகள் செல்ல ஏற்ற இடம் இதுவாகும். பருவக்காலத்தின் போது
எழில்மிகுந்து காணப்படும் இந்த அருவிக்கு அந்நேரம் செல்வதே மிகவும்
பொருத்தமாக இருக்கும்.
தற்கொலை முனை,
தற்கொலை முனை என்ற பள்ளத்தாக்கு மிகவும் ஆழமான பள்ளத்தாக்கு. இதுவும் மிக ஆபத்தான இடம். இந்த பள்ளத்தாக்கு 5000 அடி ஆழம் கொண்டது. கொடைக்கானல் ஏரிக்கு மிக அருகாமையில் 5.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த தலம்.
வைகை அணையை இங்கு இருந்தே கண்டு களிக்கலாம். இங்கு சுற்றித் திரியும் ஏரளமான குரங்குகள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும். முனையின் உச்சிக்கு படிகள் வழியாக ஏறிச் செல்ல வேண்டும்.
போகிற வழியில் இரண்டு பக்கமும் கடைகள் சூழ்ந்திருக்கும். காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரையே இவ்விடத்தை பார்க்க உகுந்த நேரம். இயற்கை அழகை ரசித்து ஓய்வெடுக்க இது நல்ல ஸ்தலமாகும்.

குறிஞ்சி ஆண்டவர் கோயில்,
குறிஞ்சி ஆண்டவர் கோயில், கொடைக்கானல்
பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. 12 ஆண்டிற்கு ஒரு
முறை பூக்கும் அறிய வகை பூவான குறிஞ்சி பூக்கள் இந்த இடத்தில் பூத்துக் குலுங்குகின்றன.
எனவே இந்த இடம் இதற்கு புகழ் பெற்றது. இக்கோயில் ஸ்ரீ குறிஞ்சி ஈஸ்வரன் என்றழைக்கப்படும் முருக கடவுளுக்காக அமைக்கப்பட்ட கோயில். 1936-ஆம் வருடம் கட்டப்பட்ட கோயில் இது.

ஹிந்து மதத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு ஐரோப்பிய பெண்ணால் கட்டப்பட்ட கோயில்
இது. அப்பெண் ஒரு ஹிந்துவை திருமணம் செய்து திருமதி ராமநாதன் என்று
அழைக்கப்பட்டார். இக்கோயில் தற்போது அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி
திருக்கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ளது.
தூண்பாறை,
தூண்பாறை கொடைக்கானல்
பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
கொடைக்கானலில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. இங்கே
செங்குத்தாக காணப்படும் மூன்று பாறாங்கல்லை வைத்தே இந்த தலம் இப்பெயரைப்
பெற்றது.
இந்த தூண்கள் 400 மீட்டர் உயரத்தில் உள்ளன. இந்த தூண்களின் உச்சியில் இருந்து பார்த்தால் இயற்கை வனப்புடைய நிலங்களைக் கண்டு மகிழலாம். இந்த தூண்களுக்குள்ள இடுக்குகள் மிகவும் ஆழமானது.
எனவே இதுவும் மிக ஆபத்தான இடமாக கருதப்படுகிறது. தூண்பாறை தமிழ்நாடு வன இலாக்கா துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.
மேலும் இந்த தூண்பாறையின் சிறப்புக்கு முக்கிய காரணமாக திகழ்வது இங்கேதான் கமல்ஹாசனின் குணா திரைப்படம் படம்பிடிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்தப் பாறை 'குணா பாறை' என்று பிரபலமாக அறியப்படுகிறது.

பேரிஜம் ஏரி,
பேரிஜம் ஏரி கொடைக்கானலில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ஏரி
காட்டிற்குள் உள்ளதால் உள்ளே செல்ல உரிய அனுமதி பெற வேண்டும். காலை 9 மணி
முதல் மதியம் 3.30 மணி வரையே உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படும்.
இதனுள்ளே காட்டெருமைகள், பாம்புகள் மற்றும் சிறுத்தைகள் ஏரியில் தண்ணீர் பருக அவ்வபோது வந்து செல்லும். நமக்கு யோகம் இருந்தால் இவைகளை காண நேரிடலாம். பலதரப்பட்ட காளான்கள் இங்கே காணக்கூடும்.
நெருப்பு கோபுரம், அமைதி பள்ளத்தாக்கு மற்றும் மருத்துவ காடு ஆகிய தலங்கள் இந்த ஏரியின் அருகில் இருப்பது இவ்விடத்திற்கு கூடுதல் ஈர்ப்பாக அமைந்துள்ளது. காட்டினில் பயணம் செய்ய இது மிகவும் ஏற்ற இடம்.

பைசன் வெல்ஸ்,
பைசன் வெல் என்ற தனிமையான இடம் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த
இடம் மலை ஏறுபவர்கள், நடை கொள்பவர்கள், பறவைகளை விரும்புபவர்கள், இயற்கை
விரும்பிகள் மற்றும் வனவிலங்குகளை விரும்புகிறவர்களை கண்டிப்பாக ஈர்க்கும்.
இதன் சுற்று வட்டாரம் இயற்கை சூழ்ந்த பகுதிகளாகும். இந்திய காட்டெருமை, நீலகிரி குரங்குகள் மற்றும் மலபார் ராட்சச அணில்கள் ஆகியவைகள் இங்கே அதிகம் காணப்படுகின்றன. ஜீப் மூலியமாக இவ்விடத்தை சுற்றி பார்க்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பிரையண்ட் பூங்கா
பிரையண்ட் பூங்கா, பேருந்து நிலையத்திலிருந்து 0.5 கி.மீ. கிழக்கே
உள்ளது. இது நன்று பராமரிக்கப்பட்டு வரும் தாவரப் பூங்காவாகும். இந்த
பூங்காவை திட்டமிட்டு 1908-ல் கட்டிமுடித்த எச்.டி. பிரையண்ட் என்ற
காட்டிலாகா அதிகாரியின் பெயராலேயே இது அழைக்கப்படுகிறது.
இப்பூங்காவில் பல வகையான குறுஞ்செடிகள், மரங்கள் மற்றும் கள்ளிச்செடிகள் வளர்க்கப்படுகின்றன. உச்ச பருவத்தின் போது வண்ணமயமான பூக்கள் இங்கு பூத்து குலுங்கும்.
1857-லிருந்து இங்கு ஒரு யூக்கலிப்டஸ் மரம் ஒன்று உள்ளது. இதே போல் பழமை வாய்ந்த போதி மரம் ஒன்றும் உள்ளன. இவையிரண்டும் இவ்விடத்திற்கு சமயஞ்சார்ந்த முக்கியத்துவத்தை அளிக்கின்றன.
பல அலங்காரச் செடிகள் மற்றும் மரங்களும் இங்குள்ள செடி வளர்ப்புப் பண்ணையில் கிடைக்கும். உச்சி காலத்தில் இப்பூங்கா தோட்டக்கலை பற்றிய பொருட்காட்சிக்கும் ஏற்பாடு செய்யும். மிக குறைந்த நுழைவு கட்டணத்தில் உள்ளே செல்லலாம்.

கோக்கர்ஸ் வாக்,
1872-ஆம் ஆண்டு இந்த இடத்தை கண்டுப்பிடித்த லெப்டினென்டு கோக்கரின் பெயராலேயே இவ்விடம் அழைக்கப்படுகிறது. கொடைக்கானல் ஏரியிலிருந்து சுமார் 1 கி.மீ. தூரம் தொலைவில் கொடைக்கானலின் தெற்குச் சரிவில் அமைந்துள்ளது.
இயற்கை விரும்பிகள் கண்டிப்பாக காண வேண்டிய இடம் இது. இந்த இடம் மிக நீளமான வளைந்த பாதைகளோடு ஆங்காங்கே அழகிய மரங்கள் மற்றும் பூக்களுடன் காட்சி அளிக்கும்.

இங்கே உள்ள ஒரு தொலைநோக்கியின் மூலம் பள்ளத்தாக்கின் அழகையும் மலைக்கு
இறக்கத்தில் அமைந்துள்ள நகரங்களையும் கண்டு களிக்கலாம். கோக்கர்ஸ் வாக்
நுழைய நுழைவுச் சீட்டு பெற வேண்டும்.
இங்கே நடை கொள்ள மதியம் 2.30 மணிக்குள் செல்ல வேண்டும்.
இல்லையென்றால் பனி கீழே இறங்க ஆரம்பித்து விடும். இயற்கையை ரசித்து கொண்டே நடைக்கொள்ள இது மிகவும் ரம்மியமான இடம்.

டால்மென் சர்க்கிள்
டால்மென் சர்க்கிள் என்பது தொல்லியல் சார்ந்த ஒரு தலம். கி.மு. 5000
ஆண்டுகளுக்கு முன் ஆதி மனிதன் வாழ்ந்த வாழ்க்கைக்கு நம்மை அழைத்துச்
செல்லும் இந்த இடம்.
இவ்விடத்தில் தோண்டியெடுக்கப்பட்ட பல பித்தளை பாத்திரங்கள்,
செப்புப்பாத்திரங்கள் மற்றும் ஆபரணங்கள் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஈடு இணையில்லா அனுபவத்தை தருவதாக இருக்கும் இந்த இடம். வரலாறு மற்றும்
தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு இந்த இடம் ஒரு சிறந்த
பொழுதுபோக்கு.
கருத்துரையிடுக Facebook Disqus