0
உங்களுக்கு பால் காய்ச்ச தெரியுமா...’ அப்படின்னு பெண்களிடம் கேட்டால், ‘இது என்ன கேள்வி, பால் கூடவா காய்ச்ச தெரியாது’ என்றுதான் பதில் வரும். அப்படிப்பட்ட ரகமா நீங்க...? உண்மையிலேயே பால் காய்ச்சுவதிலும் ஒரு பார்முலா இருக்குதுங்க. நம்மில் பெரும்பாலானோர் பால் பாக்கெட் அல்லது பசும் பால் வாங்கியதும் அதை சுண்ட காய்ச்சுகிறோம்.

பால் பொங்கிய உடன் அடுப்பை அணைத்து விடுகிறோம். ஒவ்வொரு முறை காபி, டீ போடும் போதும் பாலை காய்ச்சுகிறோம். இது தவறு என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். பாலை பலமுறை சுட வைப்பது மிக தவறான பழக்கம். காய்ச்சிய பாலை 2 முதல் 3 நிமிடங்களுக்கு மேலாக சுட வைக்கும் போது, அதில் உள்ள வைட்டமின், பி காம்ப்ளக்ஸ் சத்துக்களான பி1, பி2, பி12 ஆகியவை ஆவியாகி விடும்.

கால்சியம் மற்றும் வைட்டமின் சத்துக்களுக்காகத்தான் பால் குடிக்கிறோம். ஆனால் பாலை அடிக்கடி சுட வைப்பதால், அந்த சத்துக்கள் வீணாகி, பால் குடிப்பதே வேஸ்ட் ஆகிவிடும். பசும்பால் பயன்படுத்துபவர்கள் பால் பொங்கியதும் உடனே பாத்திரத்தை இறக்குதவதை தவிர்க்கவும். சுமார் 8 முதல் 10 நிமிடங்கள் சுட வைக்க வேண்டும். கரண்டியால் பாலை கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

அப்போது தான் 100 டிகிரி செல்சியசில் பாலில் உள்ள பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண் கிருமிகள் அழியும். நம்மில் பெரும்பாலானோர் பாக்கெட் பாலை பயன்படுத்துகின்றனர். பாக்கெட் பால் ஏற்கனவே பதப்படுத்தப்பட்டு பேக்கிங் செய்யப்படுவதால் அதை நீண்ட நேரம் காய்ச்ச வேண்டாம். 6-8 நிமிடங்கள் வரை சூடு செய்தால் போதும். பொதுவாக எந்த வகை பாலாக இருந்தாலும் அதை 2 முறைக்கு மேல் சூடு செய்ய கூடாது.

ஒரு முறை பாலை காய்ச்சிய பின் பிரிட்ஜில் வைக்கலாம். தேவைப்படும் அளவை மட்டும் எடுத்து டீ, காபி பிரிப்பேர் பண்ணலாம்...

கருத்துரையிடுக Disqus

 
Top