Study Materials for the Civics Test : There are 100 civics questions on the naturalization test. During the naturalization interview, applicants will be asked up to 10 questions from the list of 100 questions in English. You must answer correctly at least six (6) of the 10 questions to pass the civics test in English. Several study tools are available to help you prepare. To get started, see the resources below. Visit the U.S. Government Bookstore to purchase USCIS products and publications.
உங்களுக்கு அமெரிக்கா பற்றி தெரிந்து கொள்ள விருப்பம் இருந்தால் இந்த லிங்கை க்ளிக் செய்து படிக்கவும்
கிரின் கார்டு வைத்திருப்பதற்கும் சிட்டிசன் ஷிப் ஆவதற்கும் உள்ள வேறுபாடுகள் இதுதான்.
Green Card |
அமெரிக்காவில் வந்து தங்குவதற்கு வேலை பார்ப்பதற்கு விசா இருக்க வேண்டும். அந்த விசா பல வகைப்படும் ஒவ்வொரு டைப்பான விசாவிற்கு ஏற்ற மாதிரி தங்குவதின் கால வரையறை வேறுபடும்.
கிரின் கார்டு பெற்றவர்கள் இங்கு நிரந்தரமாக வாழலாம். ஆனால் அதில் சில கட்டுபாடு உண்டு. அதன்படி கிரின் கார்டு வைத்திருப்பவர்கள் ஒரு வருடத்திற்கு ஆறுமாதம் கண்டிப்பாக அமெரிக்காவில் தங்கி இருக்க வேண்டும் அதில் சில நாட்கள் குறைந்தாலும் அவர்கள் மீண்டும் கிரின் கார்டுக்கு அப்பளை செய்ய வேண்டும். க்ரின் கார்டு வைத்திருந்தாலும் அவர்கள் இந்தியர்கள்தான் அவர்களிடம் இந்தியன் பாஸ்போர்டுதான் இருக்கும். கிரின் கார்டு வைத்திருப்பவர்கள் கிரிமினல் குற்றங்களை செய்தால் தண்டனை காலம் முடிந்தவுடன் அவர்கள் நாட்டுக்கே அனுப்பிவிடுவார்கள் அதன் பின் அவர்கள் அமெரிக்கா பக்கமே திரும்பி பாரக்க முடியாது.
Citizenship Certificate |
ஆனால் சிட்டிசன் ஷிப் பெற்றவர்கள் இங்கு நிரந்தரமாக தங்கலாம் அவர்கள் அமெரிக்கர்களாகிவிடுவார்கள். அவர்கள் அமெரிக்க பாஸ்போர்டுக்கு அப்ளை செய்ய வேண்டும். அவர்கள் இங்கு ஒட்டுப் போடலாம். மத்திய அரசாங்கத்தில் பல்வேறு பதவிகளில் அமர்ந்து வேலை செய்யலாம். அமெரிக்காவின் நேச நாடுகளான கனடா லண்டன் சிங்கப்பூர் துபாய் போன்ற பல நாடுகளுக்கு விசா இல்லாமல் எப்போது வேண்டுமென்றாலும் சென்று வரலாம் மேலும் பல உரிமைகள் உண்டு. இந்தியர்கள் அமெரிக்க சிட்டிசன் ஆனால் அவர்கள் இந்தியாவின் முதல் தர குடியுரிமையை இழந்துவிடுவார்கள். இந்தியாவில் இன்னும் இரட்டை குடியுரிமை வரவில்லை ஆனால் பல நாடுகளில் இரட்டை குடியுரிமை இருக்கிறது.. ஒரு வேளை பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இரட்டை குடியுரிமை வர சான்ஸ் இருக்கிறது. அதற்காக அவர்கள் முயற்சித்து கொண்டிருந்தார்கள்
கருத்துரையிடுக Facebook Disqus