சிலருக்கு சாப்பாடு, குடிதண்ணீர் போல
இப்பொழுது இன்டர்நெட்டும் ஒரு அத்தியாவிசய தேவையாகவே மாறிவிட்டது.
இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து
அதிகரித்து வருவதாகவே பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. கணினி, மடிக்கணினி,
டேப்லெட் கணினி மற்றும் செல்போன்கள் என பல்வேறு சாதனங்கள் மூலமாக
இன்டர்நெட் பயன்படுத்தப்படுகிறது.
இப்படி
பல்வேறு தரப்பினரால் பயன்படுத்தப்படும் இன்டர்நெட் பற்றி சில சுவாரஸ்யமான
தகவல்கள் பலருக்கு தெரிந்திருப்பதில்லை. குறிப்பாக இன்டர்நெட்டில்
முதன்முதலாக என்னென்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இல்லையா?
தகவல்கள் பின்வருமாறு.
இன்டர்நெட்டில் முதன்முதலில் இ-மெயில் அனுப்பியவர் பெயர் ரே டோம்லின்சன். இவர் 1971ல் முதல் இ-மெயில் அனுப்பினார்.
ARPANET என்பதே முதல் ஸ்பேம் மெயில். இது 1978, மே 3 ஆம் தேதி மொத்தமாக 393 நபர்களுக்கு அனுப்பப்பட்டது.
முதன்முதலாக பதிவுசெய்யப்பட்ட டொமைன் பெயர் symbolics.com. இது மார்ச் 15,
1985 அன்று பதிவுசெய்யப்பட்டது. இப்பொழுது இது ஹிஸ்டாரிக் தளமாக
செயல்படுகிறது.
இன்டர்நெட்டில் முதல் பேனர் விளம்பரம் வழங்கியவர் ஜோ மக்கம்ப்ளே. இந்த விளம்பரம் வெளியான நாள் அக்டோபர் 1994.
இபே தளத்தில் முதன்முதலில் விற்கப்பட்ட சாதனம் உடைந்துபோன லேசர் பாய்ன்ட்டர். விலை $14.83. விற்கப்பட்ட வருடம் 1995.
அமேசான் தளத்தில் முதலில் விற்கப்பட்ட புத்தகம் டக்ளஸ் ஹோஃப்ஸ்டாடர்-இன் திரவ கருத்துகள் மற்றும் கிரியேட்டிவ் அனாலஜிஸ்.
ஏப்ரல் 2003ல் ஸ்கைப் தளம் வாயிலாக முதல் முதலாக பேசப்பட்ட வார்த்தைகள் "ஹலோ, நான் பேசறது கேக்குதா?" என்பதே. [தமிழில் பேசவில்லை!]
மார்க் ஜுகர்பெர்க் தான் ஃபேஸ்புக் தளத்தில் நான்காவதாக இணைந்தவர். முதல் மூன்று ஐடிகள் சோதனைக்காக பயன்படுத்தப்பட்டதாம்.
ட்விட்டர் தளத்தில் பதிவுசெய்யப்பட்ட முதல் ட்வீட் மார்ச் 21, 2006ல்
வெளியானது. இதை பதிவுசெய்தவர் ட்விட்டர் தளத்தின் துணை நிறுவுனர் ஜேக்
டோர்செய்.
கருத்துரையிடுக Facebook Disqus