0
What Is The Last Date Filing Income
ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31ம் தேதி ஆகும்.

2012ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் 2013ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீங்கள் ஈட்டிய வருமானத்திற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாள் ஜூலை 31ம் தேதி ஆகும்.

ஒருவேளை வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாள் நீட்டிக்கப்பட்டால் அதை வருமான வரித்துறை தெரியப்படுத்தும். எடுத்துக்காட்டாக கடந்த ஆண்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் கடைசி தேதி ஆகஸ்ட 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதாவது ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தால் அபராதம் கிடையாது.

வருமான வரித் துறை முடிவு செய்திருக்கும் தொகையைவிட உங்கள் வருமானம் அதிகமாக இருந்தால் அதற்கு நீங்கள் வரிமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பாக வருடத்திற்கு ரூ.10 லட்சம் வருமானம் பெறுவோர் கண்டிப்பாக ஆன்லைனில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ஒரு தனிப்பட்ட நபரோ அல்லது இந்து கூட்டு குடும்பமோ வருமான வரித் துறை நிர்ணயம் செய்திருக்கும் ரூ.10 லட்சத்தைவிட அதிகமாக 2012-2013ம் ஆண்டில் வருமானம் பெற்றிருந்தால் அவர்கள் கண்டிப்பாக இ-பைலிங் செய்ய வேண்டும் என்று வருமான வரித் துறை ஆணை பிறப்பித்திருக்கிறது.
எனவே நீங்கள் வருமான வரியை தாக்கல் செய்யத் தேவையான ஆவணங்களை தயார் செய்து வைத்திருப்பது மிகவும் நல்லது.

கருத்துரையிடுக Disqus

 
Top