1
கம்ப்யூட்டர் பயன்படுத்துவதென்பது தற்பொழுதெல்லாம் மிகவும் சாதாரணமாகிவிட்டது. ஆனால் இதுவே சில வருடங்களுக்கு முன்? பள்ளி, கல்லூரிகளில் கூட கம்ப்யூட்டர் பயன்படுத்த முடியாது, இருக்காது. ஆனால் தற்பொழுதுள்ள நவீன முன்னேற்றங்களில் குழந்தைகளும் கணினி நுண்ணறிவுடனே தயாரிக்கின்றன பள்ளிகள்!

கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் எத்தனை வகைகள் உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்களா? சாதாரண வீட்டுக்கணினி[டெஸ்க்டாப்], மடிக்கணினி என பட்டியல் நீள்கிறது.

வீட்டுக்கணினி[டெஸ்க்டாப்]

இது பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒன்றுதான். அலுவலகங்களையும் சேர்த்துதான். படிப்பது, பாடல்கள் மற்றும் படங்களை ரசிப்பதற்கும் சுலபமாக இருக்கும்.

லேப்டாப்:

இது மடிக்கணினி என அழைக்கப்படுகிறது. தேவையான இடங்களுக்கு எடுத்துச்செல்வது எளிது. பயன்பாடும் நன்றாகவே இருக்கும். இந்த மடிக்கணினிகளை பல்வேறு நிறுவனங்கள் வடிவமைக்கின்றன. டெல், ஹெச்பி, சோனி மற்றும் பல..,

நெட்புக்:

இவ்வகை கணினிகள் லேப்டாப் கணினிகளைவிடவும் அளவில் சிறியதாக இருக்கும். இன்டர்நெட் பயன்பாடு அதிகம் உள்ளவர்கள் இதை பயன்படுத்தலாம். விலையும் மடிக்கணினிகளை விடவும் குறைவாகவே இருக்கும்.
 

பிடிஏ:

பர்சனல் டிஜிடல் அசிஸ்டன்ட்ஸ் [PDA] வகை கணினிகள் அளவில் மிகவும் சிறியதாகவும், ஹார்ட்டிஸ்க் போன்ற நினைவகங்களை பயன்படுத்தாமல் ஃபிளாஷ் வகை நினைவகங்களையே பயன்படுத்துகின்றன. இவை தொடுதிரை வசதிகளுடனே கிடைக்கும்.

அணியும் வகையிலான கணினிகள்:

இவ்வகை கணினிகள் கைகளில் அணியும் வகையிலான கணினிகளாகவே இருக்கும். அளவில் மிகவும் சிறியதாக இருந்தாலும் செயல்திறன் அதிகம்கொண்டது.

சர்வர்:

ஒரு நெட்வொர்க்கில் உள்ள பல கணினிகளை கட்டுப்படுத்தும் தலைவனாக செயல்படுவதே சர்வர் கணினியாகும். இது மற்ற கணினிகளை விடவும் செயல்திறன், நுட்பம் மற்றும் இயங்குதளங்களில் பிரத்யோக மாற்றங்கள் செய்யப்பட்டவையாக இருக்கும்.

சூப்பர் கணினிகள்:

இவை விலை சற்றும் எதிர்பார்க்க முடியாத அளவுகளில் இருக்கும். கோடிகளில் கூட சூப்பர் கணினிகள் விற்கப்படுகின்றன. இவற்றை கூகுள், பேஸ்புக் போன்ற இணைய நிறுவனங்களும், பிக்ராக்,கோடாடி மற்றும் ஹோஸ்ட்கேட்டர் போன்ற ஹோஸ்டிங் நிறுவனங்களும்

மெயின்ஃபிரேம்:

அளவில் மிகவும் பெரியதாக இருக்கும் இந்த மெயின்ஃபிரேம் வகை கணினிகள் தற்பொழுது அதிகம் பயன்படுத்தப்படுவது இல்லை. ஐபிஎம் போன்ற ஒருசில நிறுவனங்களே இவற்றை பயன்படுத்துவதாக தெரிகிறது

கருத்துரையிடுக Disqus

 
Top