0

கோவையில் ஒரு வீட்டை 35 அடி தூரத்திற்கு நகர்த்தி தனியார் நிறுவனம் சாதனை படைத்துள்ளது ..2000 ஆம் வருடம் கட்டப்பட்ட,இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ. 70 லட்சம் ஆகும். வீட்டின் முன்புறம் தங்கவேலுக்கு சொந்தமாக உள்ள காலி இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் வணிக வளாகம் கட்டுவதற்கு 40 அடி அளவிற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்காக வீட்டை இடித்து புதிய வீடு கட்டினால் ரூ. 1 கோடிக்கு மேல் செலவு ஆகும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அரியானாவை சேர்ந்த டி.டி.பி.டி. நிறுவனத்தினர் சாயிபாபா காலனியில் உள்ள ஒரு வீட்டை சில அடிகள் உயர்த்தினர்.
தையடுத்து டி.டி.பி.டி. நிறுவனத்தை தொடர்புகொண்டு கேட்டபோது தங்கவேலு வீட்டை இடிக்காமல் எவ்வித பாதிப்பும் இன்றி நகர்த்தி தர உறுதியளித்தனர். இதற்கு ரூ.20 லட்சம் வரை செலவாகும் எனவும் தெரிவித்தனர்.

எனவே வீட்டை இடிக்காமல் நகர்த்துவது என முடிவு செய்யப்பட்டு பிப்ரவரி மாதம் பணி தொடங்கியது. இதற்காக 300 ஜாக்கிகள் மூலம் சுமார் 1.5 அடிக்கு உயர்த்தி அஸ்தி வாரத்தை துண்டித்து செங்கல் வைக்கப்பட்டது. பின்னர் 300 ரோலர்கள் பொருத்தப்பட்டு ஒரு நாளைக்கு 3 முதல் 4 அடி வரை வீட்டை பின்னோக்கி நகர்த்தி வருகின்றனர். இந்த வீட்டின் கழிவு நீர் தொட்டி இணைப்பு மட்டும் துண்டிக்கப்பட்டுள்ளது. குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட இணைப்புகள் துண்டிக்கப் படவில்லை. ஜன்னல், கதவு போன்றவையும் அகற்றப்படவில்லை. தற்போது 15 பணியாளர்கள் உதவியுடன் 35 அடி தூரத்திற்கு வீடு நகர்த்தப்பட்டுள்ளது.இந்த மாத இறுதிக்குள் 50 அடி நகர்த்தி விடுவார்களாம்..
2000 ஆம் வருடம் கட்டப்பட்ட,இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ. 70 லட்சம் ஆகும். வீட்டின் முன்புறம் தங்கவேலுக்கு சொந்தமாக உள்ள காலி இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் வணிக வளாகம் கட்டுவதற்கு 40 அடி அளவிற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்காக வீட்டை இடித்து புதிய வீடு கட்டினால் ரூ. 1 கோடிக்கு மேல் செலவு ஆகும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அரியானாவை சேர்ந்த டி.டி.பி.டி. நிறுவனத்தினர் சாயிபாபா காலனியில் உள்ள ஒரு வீட்டை சில அடிகள் உயர்த்தினர்.
தையடுத்து டி.டி.பி.டி. நிறுவனத்தை தொடர்புகொண்டு கேட்டபோது தங்கவேலு வீட்டை இடிக்காமல் எவ்வித பாதிப்பும் இன்றி நகர்த்தி தர உறுதியளித்தனர். இதற்கு ரூ.20 லட்சம் வரை செலவாகும் எனவும் தெரிவித்தனர்.

எனவே வீட்டை இடிக்காமல் நகர்த்துவது என முடிவு செய்யப்பட்டு பிப்ரவரி மாதம் பணி தொடங்கியது. இதற்காக 300 ஜாக்கிகள் மூலம் சுமார் 1.5 அடிக்கு உயர்த்தி அஸ்தி வாரத்தை துண்டித்து செங்கல் வைக்கப்பட்டது. பின்னர் 300 ரோலர்கள் பொருத்தப்பட்டு ஒரு நாளைக்கு 3 முதல் 4 அடி வரை வீட்டை பின்னோக்கி நகர்த்தி வருகின்றனர். இந்த வீட்டின் கழிவு நீர் தொட்டி இணைப்பு மட்டும் துண்டிக்கப்பட்டுள்ளது. குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட இணைப்புகள் துண்டிக்கப் படவில்லை. ஜன்னல், கதவு போன்றவையும் அகற்றப்படவில்லை. தற்போது 15 பணியாளர்கள் உதவியுடன் 35 அடி தூரத்திற்கு வீடு நகர்த்தப்பட்டுள்ளது.இந்த மாத இறுதிக்குள் 50 அடி நகர்த்தி விடுவார்களாம்..

கருத்துரையிடுக Disqus

 
Top