இதனால் தான் நாம் உலகில் எந்த மூளையில் எது நடந்தாலும் டி.வி.யின்(Television) மூலமாக பார்க்க முடிகிறது.
ரேடியோ(Radio), டெலிபோன்(Telephone), இன்டர்நெட் (Internet), ராணுவ தொடர்பு, வானிவியல் ஆராய்ச்சி, பூமியை படம் பிடிப்பது தொடர்பான வேலைகளுக்கு செயற்கைக்கோள்கள் உதவுகின்றன.
இதன் மூலம் எல்லா துறைகளிலும் முன்னேற்றத்தைக் கொண்டு வரலாம்.
பூமியில் இருந்து 300 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள செயற்கைக்கோள் 90 நிமிடங்களில் பூமியைச்சுற்றி வரும். அதேபோல், 36 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் அதை நிலைநிறுத்தினால், அது பூமியை 24 மணி நேரத்தில் சுற்றி வருகிறது.
இதன்படி, நமக்கு தேவையான திசைகளில் நிலைநிறுத்தி, அதன்மூலம் தகவலை பெற்றுக்கொள்ளலாம்.
ஒரு செயற்கைக்கோள் குறைந்த பட்சமாக 10 ஆண்டுகள் வானில் வலம் வருகிறது.
இது இயங்குவதற்குத் தேவையான சக்தி, சூரியனிடம் இருந்து கிடைக்கிறது. ரிமோட் சென்சிங்(Remote sensing ) உள்ள செயற்கைக்கோள்களின் மூலம் பூமியில் ஏற்படும் பருவ மாற்றங்களையும், கடலில் உள்ள மீன் வளத்தையும் அறிய முடியும்.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் செயற்கைகோள்களின் மூலம் எத்தனையோ பயன்கள் விளைகின்றன.
வானிலை அறிக்கைத் தகவல்களை இந்த செயற்கைக்கோள் எடுக்கும் படங்களின் உதவியால் வெளியிடுகின்றன..
நம் கூகுள்மேப் (Google maps)கூட இந்த செயற்கைகோள் உதவியால் எடுக்கப்பட்ட படங்களைக்கொண்டே செயல்படுகிறது.
இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் இந்த செயற்கைகோள்களின் உதவியால் அதிக முன்னேற்றம் கண்டிருக்கிறோம் என்பது உண்மை.
தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்த அளவிற்கு முன்னேற்றம் காண இந்த செயற்கோள்களே காரணம் என்றால் அது மிகையாகாது.
கருத்துரையிடுக Facebook Disqus