பேஸ் புக்கில், இரண்டாயிரம் நண்பர்கள் இருப்பதாக மகனின் புராணத்தை பேசியபடி இருந்தாள் தோழி. இந்த வயதில் படிப்பைத் தவிர, இதெல்லாம் தேவையா என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே, கிளம்பி வந்துவிட்டேன்.
சில மாதங்களுக்கு பின் எதேச்சையாக, என் தோழியை வழியில் சந்தித்த போது கவலையுடன் காணப்பட்டாள், என்ன என்று விசாரித்ததில், கண்ணீர் விட்டு அழுதாள். என் தோழி அதிகம் படிக்கவில்லை; கம்ப்யூட்டர் பற்றி ஒன்றும் தெரியாது. ஒரு நாள், அவள் கணவர், அலுவலகத்திலிருந்து சீக்கிரமாக வீடு திரும்ப, மகன் ஆபாச படங்களை பார்ப்பதைப் பார்த்து அதிர்ந்து விட்டார். அதட்டி கேட்க, எதிர்த்து பேசும் அளவு துணிந்து விட்டான்.
இன்டர்நெட் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால், பித்து பிடித்தவன் போல் இருப்பதாக சொல்லி அழுதாள். எவ்வளவோ கவுன்சிலிங் கொடுத்தும் இன்னும் சரியானபாடில்லை என்று கூறி, அவள் அழுததைப் பார்க்க வேதனையாக இருந்தது.
பெற்றோர்களே... படிக்கும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு பேஸ் புக் தேவையா என்று @யாசியுங்கள். குழந்தைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கிறோம் என்ற பெயரில், குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை வீணாக்காதீர். படிப்பு சம்பந்தமாக ஏதாவது பார்க்க வேண்டுமென்றால், நீங்களும் கூடவே இருங்கள்.