காரை ஸ்டார்ட் செய்வதற்கு சாவியை தேடி தேடி இனி டென்ஷனாக வேண்டாம். கைரேகையை காண்பித்தால் போதும் காரை ஸ்டார்ட் செய்துவிடலாம்.
சிவிகேபி- பிஜி04 என்ற பெயரிடப்பட்டுள்ள புதிய சாதனம், கைரேகை அடையாளத்தை வைத்து காரை ஸ்டார்ட் செய்ய அனுமதிக்கிறது. இந்த சாதனம் டியூவல் பேண்டு ஜிஎஸ்எம் சிம் கார்டு உதவியுடன் இயங்குகிறது.
ஸ்டீயரிங் வீல் பின்புறம் டேஷ்போர்டில் பொருத்திக்கொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சாதனத்தில் காரின் உரிமையாளர் தனது விரல் ரேகையை பதிவு செய்துகொண்டால் போதும்.
சாவி இல்லாமல், வெறும் கைரேகை அடையாளத்தை வைத்தே காரை ஸ்டார்ட் செய்ய இந்த சாதனம் அனுமதிக்கிறது. மேலும், 9 பேரின் கைரேகையை இந்த சாதனத்தில் பதிவு செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. 
அன்னியர்கள் யாரேனும் காரை ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்தால், உடனடியாக உரிமையாளருக்கு இந்த சாதனம்மொபைல்போன் மூலம் தகவல் தெரிவித்துவிடுகிறது. 
தவிர, காரில் பொருத்தப்பட்டிருக்கும் அபாயமணியும் ஒலிக்கும். கார் திருட்டை முற்றிலும் தடுக்கும் வகையில் இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
சாதனத்தின் சிறப்பம்சங்கள்:
9 பேரின் கைரேகைகளை பதிவு செய்துகொள்ளும் வசதி
தேவையில்லாதவர்களின் கைரேகை பதிவை எளிதில் நீக்கிவிடமுடியும்
ரிமோட் மூலம் காரை திறந்து மூடும் வசதி
மொபைல்போனிலிருந்து எஸ்எம்எஸ் அனுப்பினால், எஞ்சினுக்கு எரிபொருள் செல்வதை இந்த சாதனம் நிறுத்திவிடும்
கார் கதவை உடைத்து திறக்க முயற்சித்தால் எஸ்எம்எஸ் மூலம் உரிமையாளரை எச்சரிக்கும்
அவசர தேவைக்கு புதியவர்களும் காரை ஸ்டார்ட் செய்ய அனுமதிக்கும் வசதி
 
Top