0
இப்பதிவில் PPF (Public Provident Fund) Account ஐ மற்ற வங்கிக்கோ அல்லது அஞ்சலகத்திற்கோ மாற்றுவது எப்படி என்பதைக் குறித்துப் பார்ப்போம்.

மனித வாழ்க்கையில் நிரந்தரம் என்பது இல்லை. ஒரு சில விஷயங்களைத் தவிர மற்றவை யாவுமே நிரந்தரம் அல்ல.

மனிதன் தனது தேவைகளுக்காக இரவு பகல் பாராமல், எங்கும் தேடித் திரிந்து, அலைந்து தனது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முனைகிறேன். அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றுவிடுகிறான்.

அதுபோன்ற பொருள்தேடலில், குறிப்பாக அரசு வேலையில் உள்ளவர்கள் ஓரிடத்திலிருந்து திடீரென்று மற்றொரு இடத்தில் மாற்றல் ஆகி செல்கின்றனர். இது தவிர்க்க முடியாதது. அவ்வாறு வேறொரு இடத்திற்கு மாற்றல் ஆகிச்செல்லும்பொழுது, அவர்களுடைய உடமைகளையும் எடுத்து செல்ல வேண்டியதிருக்கிறது. பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர்.

குழந்தைகளின் பள்ளிப் படிப்பு, பள்ளிக்கூட மாறுதல்கள், மற்றத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் என அனைத்தையும் மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்குள் போதும்போதும் என்றாகிவிடும்.

இதைப்போன்றதொரு முக்கியமான பிரச்னைதான் வங்கிகளில் PPF Account வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்களுக்கும்.  ஒவ்வொரு முறையும் அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கோ, அஞ்சலகத்திற்கு மாற்றல் ஆகிச் சென்ற ஊரிலிருந்து வந்து, நடைமுறைகளைப் பதிவு செய்ய முடியாது. அதைத் தவிர்க்க, அவர்கள் மாற்றல் ஆகிப்போகும் இடங்களில் உள்ள வங்கிகள் அல்லது அஞ்சல் அலுவலங்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கை (PPF Account) மாற்ற வேண்டியதிருக்கும். அவ்வாறு மாற்ற என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை கீழே பார்ப்போம்.


  1. முதலில் உங்களுடைய PPF (Public Provident Fund) Account-ஐ மாற்றக் கோரி நீங்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு ஒரு விண்ணப்பம் எழுத வேண்டும்.  நீங்கள் அஞ்சலகத்தில் கணக்கு வைத்திருந்து, வங்கிக்கு கணக்கை மாற்ற வேண்டுமெனில் Transformer Form - ஐ Download செய்ய வேண்டும். 
  2. அதில் புதியதாக நீங்கள் இடம்மாறிய முகவரியை குறிப்பிட்டு அந்த முகவரிக்கு உங்களுடைய கணக்கை மாற்ற வேண்டும் என்பதைக் குறிப்பிட வேண்டும். 
  3. அக்கடிதத்தோடு உங்களுடைய PassBook-ஐயும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 
  4. அத்துடன் உங்களை அடையாளப்படுத்தும் வகையில் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய ரேஷன் கார்ட், Pan Card, Voter ID போன்றவைகளில் ஏதேனும் ஒன்றை அத்துடன் இணைத்திருக்க வேண்டும். 
  5. சமர்ப்பித்த படிவத்தில் உள்ள ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, உங்களுடைய கணக்கு முடிக்கப்பட்டு அதற்குரிய ஆவணங்கள் மற்றும் இருப்புத் தொகைக்கான Demand Drarf அல்லது  Cheque ஆக நீங்கள் கேட்ட வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிடும். 
  6. நீங்கள் குறிப்பிட்ட வங்கிக்கு தேவையான தகவல்கள், மற்றும் காசோலை கிடைத்தவுடன் அந்த வங்கியிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். 
  7. அதன்பிறகு அந்த வங்கியிலிருந்து புதிய பாஸ்புக் உங்களுக்கு வழங்கப்படும். 
  8. மேற்கண்ட நடைமுறைகளுக்கு குறைந்த பட்சம் மூன்று வாரங்கள் ஆகும். அதிக பட்சமாக நான்கு வாரங்கள் ஆகும். இதற்கென உங்களிடம் எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டது. 
முக்கிய குறிப்புகள்: 


  • இந்த PPF கணக்கு மாற்றம் செய்வதற்கு முன்பு அதுவரைக்கு நடைந்த பிராசஸ் அனைத்தும் பதிவேற்றப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து வைத்துக்கொள்ள வேண்டும். ஏதேனும் விடுப்பட்டிருந்தால் அவற்றை முழுமையாக பதிந்துகொண்டு பிறகு கணக்கு மாற்றத்தைச் செய்ய வேண்டும்.
  • PPF கணக்கு மாறுதல்களுக்கு முன்பாக அந்த Pass Book - ஐ ஒரு நகல் (Xrox) எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.
  • கணக்கு மாற்றத்திற்குப் பிறகு, புதிய வங்கி கொடுக்கும் பாஸ்புக்கில் அந்த வங்கியின் நடவடிக்கைகள் மட்டுமே பதியப்படும். பழை வங்கியில் பதிந்த நடவடிக்கைகள் அதில் பதியப்பட மாட்டா.
  • மாற்றம் செய்யப்பட்ட பிறகு, அக்கணக்கு தொடர் கணக்காகவே கருதப்படும். கணக்கை மாற்றும்பொழுது தேவைப்பட்டால் Nominee பெயரையும் மாற்றம் செய்துகொள்ள முடியும். அதனால் நாமினி மாற்றம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் அத்தருணத்தில் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top