301 (a). வில்லேந்தியவன் எல்லாம் வீரன் அல்ல.

301 (b). All are not hunters that blow the horn.



302 (a). பேராசை பெரு நஷ்டம்.
302 (b). Covet all, lose all!



303 (a). எல்லோரும் பல்லக்கு ஏறினால் சுமப்பவர் யார்?
303 (b), All men can’t be masters.



304 (a). யதார்த்தவாதி வெகு ஜன விரோதி.
304 (b). All truths are not to be told.



305 (a). பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும் .
305 (b). An evil chance seldom comes alone.



306 (a). காலை எழுந்தவுடன் படிப்பு.
306 (b). An hour in the morning is worth two in the evening.



307 (a). மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.
307 (b). An oak is never felled in one stroke.



308 (a). திறந்த கதவு துறவியையும் திருடன் ஆக்கும்.
308 (b). An open door may tempt a saint.



309 (a). மாட்டுக்குக் கொம்பு; மனிதனுக்கு நாக்கு.
309 (b). An ox is taken by its horn and a man by his tongue.



310 (a). ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
310 (b). Anger and haste hinder good counsel.

 
Top