திருவள்ளூர் மாவட்டம்
சிவபெருமான் சயனக் கோலத்தில் காட்சி தரும் இந்தியாவின் ஒரே கோவில் சுருட்டப்பள்ளி
அடிப்படைத் தகவல்கள்
| |
தலைநகர்
|
திருவள்ளூர்
|
பரப்பு
|
3,422 ச.கி.மீ
|
மக்கள்தொகை
|
24,38,366
|
ஆண்கள்
|
13,90,292
|
பெண்கள்
|
13,48,574
|
மக்கள் நெருக்கம்
|
800
|
ஆண்-பெண்
|
970
|
எழுத்தறிவு விகிதம்
|
75.94%
|
இந்துக்கள்
|
24,75,438
|
கிருத்தவர்கள்
|
1,69719
|
இஸ்லாமியர்
|
99,408
|
புவியியல் அமைவு
| |
அட்சரேகை
|
120.15-130.15N
|
தீர்க்கரேகை
|
190.15-800.20E
|
இணையதளம்
www.tiruvallur.in.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrtir@tn.nic.in
தொலைபேசி: 144-27661600
எல்லைகள்: இதன் கிழக்கில் வங்காள விரிகுடா மற்றும் சென்னை மாவட்டமும், வடக்கில் ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டமும்: தெற்கில் காஞ்சீபுரம் மாவட்டமும்; மேற்கில் வேலூர் மாவட்டம் மற்றும் ஆந்திரத்தின் சித்தூர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: இங்குள்ள ஸ்ரீவீரராகவர் ஆலையம் பெருமானின் சயன கோலத்தை விளக்கி நிற்பதே 'திருவள்ளூர்' எனப்படுகிறது.
வரலாற்றில் பல்லவர், கோல்கொண்டா, மொகலாயர், பிரெஞ்சு, டச்சு மற்றும் ஆங்கலேயர் ஆட்சிக்குட்பட்டிருந்தது.
1996 ஜூலை ஒன்றாம் தேதி செங்கல்பட்டு ம ஆவட்டத்தில் இருந்தது பிரிக்கப்பட்டு, புது மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
1997 ஜனவரி ஒன்று முதல் திருவள்ளூர் மாவட்டம் நடைமுறையில் வந்தது.
முக்கிய ஆறுகள்: ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆறு, கூவம்.
நிர்வாகப் பிரிவுகள்
வருவாய் கோட்டங்கள்: - 3; திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, தாலுகாக்கள் - 8 : கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, அம்பத்தூர், ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, நகராட்சிகள்: 12; திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர், கத்திவாக்கம், மதுரவயல், மணலி, பூந்தமல்லி, திருத்தணி, திருவேற்காடு, வளசரவாக்கம், ஊராட்சி ஒன்றியங்கள்-14: எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, கடம்பத்தூர், மீஞ்சூர், பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, பூண்டி, புழல், ஆர்.கே. பேட்டை, சோழாவரம், திருவள்ளூர், திருத்தணி, திருவாலங்காடு வில்லிவாக்கம்.
குறிப்பிடதக்க இடங்கள்:
பட்டினத்தார் சமாதி: பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்து சென்னை அருகேயுள்ள திருவொற்றியூரில் மறைந்த தமிழ் சித்தர் மரபைச் சேர்ந்த ஞானி.
கருமாரியம்மன் கோவில்: சென்னையிலிருந்து 18 கி.மீ.தொலைவில் உள்ள திருவேற்காடு கருமாரியம்மன் ஆலையம் தமிழகமெங்கும் பிரபலமானது.
சுருட்டப்பள்ளி: ஆலகால விஷத்தை உண்ட சிவன் மயக்கத்தில் பள்ளி கொண்ட நிலையில் இருக்கும் கோவில் இந்தியாவிலேயே இது ஒன்றுதான். இக்கோயில் சனிப்பிரதோஷத்திற்கு பெயர் பெற்றது.
பூண்டித சத்தியமூர்த்தி சாகர் எனப்படும் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து தான் சென்னைக்குத் தேவையான குடிநீரை அளிக்கும செங்குன்றம் ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
அம்பத்தூர்: இந்தியாவின் மாபெரும் தொழில் நகரங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள தொழிற்பேட்டை தெற்காசியாவிலேயே மிகப் பெரியது.
வீரராகவப் பெருமான கோவில் ஒன்றான இது, சென்னையிலிருந்து 43 கி.மீ. தொலைவில் உள்ளது.
திருவொற்றியூர் வடிவுடையம்மன் திருக்கோவில்: தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள் 32-இல் ஒன்று. இந்து சமயத்தின் அனைத்துப் பிரிவினரும் வழிபடும் தலம்.
பழவேற்காடு உப்பேரி பறவைகள் சரணாயலம்: கடல் நீரும் பக்கிங்ஹாம் ஏரித் தண்ணீரும் ஒன்று கலக்கும் ஏரி. மீன்வளம் மிகுந்தது. ஒரு டச்சுக் கல்லறை உள்ளது. சென்னைக்கருகிலுள்ள வித்தியாசமான சுற்றுலாத் தலம்.
திருத்தணி: முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்று. ஆடிக் கிருத்திகை, தெப்ப உலா பிரபலமான விழாக்கள்.
ஆவடி: டாங்கித் தொழிற்சாலை(Tank factory), விமானப்படை நிலையம் ( Air Force Station)அமைந்துள்ளது.
இருப்பிடமும், சிறப்பியல்களும்
|
சென்னையிலிருந்து 46 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
|
மத்திய அரசின் டாங்கித் தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை(Refineries), டயர் தொழிற்சாலைகள்(tire plants) போன்றவை உள்ளன.
|
பூண்டி நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம் ஏரி போன்றவை இங்குள்ளன.
|
தமிழ்ப்புலவர் சேக்கிழார் பிறந்த தலம் குன்றத்தூர்.
|
காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்த திருவேலங்காடு திருத்தலம்
|
திருத்தணி ஆடிக்கிருத்திகை பெருவிழா. பெரியபாளையம் ஆடித் திருவிழா போன்றவை மாவட்டத்தின் முக்கிய விழாக்கள்.
|
விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சனேயர் ஆலயம்: 32 அடி உயரமுள்ள இந்த ஆஞ்சனேயர் பச்சை நிற பளிங்குக் கல்லால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
|
கருத்துரையிடுக Facebook Disqus