321 (a). தெரிந்த எதிரி தெரியாத நண்பனைவிட மேல்.
321 (b). Better an open enemy than a false friend.
322 (a). அரசன் மகனாகப் பிறப்பதைவிட
அதிருஷ்டக்காரனாகப் பிறப்பதே மேல்.
322 (b). Better to be born lucky than rich.
323 (a). கால் பிறழ்ந்தாலும் நாப் பிறழாதே!
323 (b). Better the foot slip than the tongue.
324 (a). துன்பமே மனிதனின் உரைகல்.
324 (b). Calamity is a man’s true touchstone.
325 (a). துணிவே வெற்றியைத் தரும்.
325 (b). Cheeky fellow succeeds.
326 (a). மழலைச் செல்வமே ஏழைகளின் செல்வம்.
326 (b). Children are a poor man’s riches.
327 (a). நல்ல நூல் நல்ல நண்பன்.
327 (b). Choose an author as you would choose a friend.
328 (a). அடக்குமுறை அல்ல அறிவுரை.
328 (b). Counsel is not command.
329 (a). கடன் வாங்கினவன் மறந்தாலும் கடன் கொடுத்தவன் மறக்க மாட்டான்.
329 (b). Creditors have better memory than debtors.
330 (a). ஆழம் குறைந்த இடத்தில் ஆற்றைக் கட.
330 (b). Cross the river where it is shallowest.