341 (a). உழைக்காத செல்வம் நிலைக்காது.

341 (b). Easy come, easy go.



342 (a). அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
342 (b). Eat at pleasure and drink with measure.



343 (a). போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
343 (b). Enough is as good as a feast.



344 (a). பொறாமைத்தீ தன்னையே எரிக்கும்.
344 (b). Envy shoots at others and wounds herself.



345 (a). காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
345 (b). Every mother thinks that her own gosling is a swan.



346 (a). நிலவுக்கும் களங்கம் உண்டு.
346 (b). Every bean has its black.



347 (a). வீட்டிலே புலி; வெளியிலே எலி.
347 (b). Every dog is a lion at home.



348 (a). குறையே இல்லாதவன் பிறக்கவே இல்லை.
348 (b). Every man has his faults.



349 (a). கெட்ட காலத்திலும் நல்ல காலம்.
349 (b). Silver lining of a dark cloud.



350 (a). காலம் செய்கிறதை ஞாலம் செய்யாது.
350 (b). Everything comes to him who learns to wait.

 
Top