391 (a). இன்பத்தைத் தொடரும் துன்பம்.

391 (b). Pleasure has a sting on its tail.



392 (a). துணிவால் சாதிக்க முடியாததைப்
பணிவால் சாதிக்கலாம்.

392 (b). Courtesy conquers where confrontation fails.



393 (a). வாக்கு என்னும் கடன்.
393 (b). Promise is a debt.



394 (a). தவறுக்கு வருந்து. தவறே செய்யாமல் இருப்பது அருமருந்து.
394 (b). It is good to repent for your sins. It is better to refrain from sins.



395 (a). சொல் வேறு; செயல் வேறு.
395 (b). Saying is different from doing.



396 (a).மௌனம் சம்மதம்.
396 (b). Silence is consent.



397 (a). சூரியனைப் பார்த்து நாய் குரைத்தால்
சூரியனுக்குக் கேடா நாய்க்குக் கேடா?

397 (b). The dogs bark but the caravan moves on.



398 (a). நல்ல தொடக்கம் பாதி வெற்றி.
398 (b). The first blow is half the battle.



399 (a). ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை.
399 (b). The pot called the kettle black.



400 (a).நகமும் சதையும் போல; உடலும் உயிரும் போல.
400 (b). They are hand and glove.
 
Top