ஐஏஎஸ் தேர்வு எழுத விரும்பும் மாணவிகளுக்கு
கல்லூரிக் கல்வி இயக்ககம் சார்பில் சென்னையிலும் மதுரையிலும் இலவசப்
பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்பும் மாணவிகளுக்கு, கல்லூரிக் கல்வி இயக்ககம் சார்பில் சென்னையிலும் மதுரையிலும் இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.சென்னையில் ராணி மேரி கல்லூரியிலும் மதுரையில் ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியிலும் இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது. இந்த இலவசப் பயிற்சியில், நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியுடைய மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஏதேனும் பட்டப் படிப்பைப் படித்த மாணவிகள் இந்தப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். 1-8-2014 நிலவரப்படி 21 வயதாகி இருக்க வேண்டும். பொதுப் பிரிவு மாணவிகளுக்கு 30 வயதுக்கு மேல் ஆகி இருக்கக்கூடாது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 33 வயதுக்கு மேல் ஆகி இருக்கக்கூடாது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 35 வயதுக்கு மேல் ஆகி இருக்கக்கூடாது.

நுழைவுத் தேர்வில் இந்திய வரலாறு, புவியியல், பொது நிர்வாகம், பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள், பொது ஆங்கிலம், பொது அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளிலிலிருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். ராணி மேரி கல்லூரியிலும் மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியிலும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலை 10.30 மணியிலிருந்து 12.30 மணி வரை நுழைவுத் தேர்வு நடைபெறும். இத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியிடப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 16-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். எந்த மையத்தில் படிக்க விரும்புகிறோமோ அந்தக் கல்லூரியின் முதல்வர் பெயருக்கு ரூ.200-க்கான டிமாண்ட் டிராப்ட் எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்ப உறையின் மேற்பகுதியில், ‘CIVIL SERVICES EXAMINATIONS COACHING APPLICATION FOR ENTRANCE EXAMINATION’ என்று குறிப்பிட வேண்டும்.
மாதிரி விண்ணப்பம்
1. Name (in Block Letters) :
2. Father's / Guardian's Name :
3. Date of Birth and Age as on 1.8.2014 :
4. Academic Qualification & Subject :
5. Community :
6. Annual Income of the parent / guardian :
7. Address with Phone Number :
a) Permanent :
b) Present :
8. Extra curricular activities :
Place :
Date :