"வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் செய்துப்பார்' என, ஒரு பழமொழி உண்டு. அதுவும், இன்று மண்டபம், சாப்பாடு மற்ற செலவுகள் என, லட்சக்கணக்கில் பணம் செலவாவதால், பெற்றோர் விழிபிதுங்கிப் போகின்றனர். இந்த நிலையில், சில பண முதலைகளோ... தங்களுடைய டாம்பீகத்தை காட்ட, கல்யாண விழாவில் கலந்து கொள்ள, சினிமா நட்சத்திரங்களை அழைக்கின்றனர்.

இதற்கு, பல லட்ச ரூபாய் செலவு செய்கின்றனர்.

பிரபல இந்தி நடிகர் ஒருவர், கல்யாணங்களில் கலந்து கொள்ள, ஐந்து கோடி ரூபாய் கேட்கிறார். இவர்கள், ஒரு மணி நேர சிறப்பு நிகழ்ச்சி நடத்துவர் அல்லது முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு, அளவளாவுவர். இப்படி, இவர்களுக்கு கொட்டிக் கொடுக்கும் பணத்தை, ஏழை, எளிய மக்களை வாழ வைக்கும் சேவை நிறுவனங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் கொடுத்தால், அந்த உள்ளங்களாவது மகிழ்ந்து, ஆசீர்வாதம் செய்யும். நாம் செய்த, பெரிய செலவுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும்.

சமீபகாலமாக, தமிழ் சினிமா நட்சத்திரங்களையும் அழைக்கத் துவங்கியுள்ளனர். அதிர்ஷ்டம் என்ற ஏணியின் மூலம், புகழின் உச்சியை தொட்ட இவர்களை அழைத்து, காசை வீணாக்குவதை விட, நல்ல செயல்களுக்கு உதவி செய்து, மனத்திருப்தி அடையலாமே!
 
Top