ராசிக்கல் , உடம்பு இளைக்க ஏற்ற , செக்ஸ் பிரச்சனையா இந்த நமபரை தொடர்பு கொள்ளவும் என்று நம்பர் தந்திருக்கும் தெரியாமால் மிஸ் கால் குடுத்து விட்டால் அடுத்த நிமிடமே நமக்கு அழைப்பு வரும்முதலில் ராசிக்கல் விளம்பரத்தை பாத்தவுடன் ஏமாந்து வாங்கினால் அதிர்ஷ்டம் அடிக்கும் என்று 2000 ரூபாய்க்கு வாங்குகிறார்கள் அதன் உண்மையான மதிப்பு 5 ரூபாய் மட்டுமே மந்திர தந்திரங்கள் செய்ததது என்று கூறி விற்கப் படுகிறது
உடம்பு இளைக்க ஏற்ற தரப்படும் மருந்து சாதாரண எதிர்ப்பு சக்தி கூட இல்லாத மருந்து
செக்ஸ் பிரச்சனை பலருக்கும் இருக்கிறது 52 வகையான ஆயுர்வேத மூலிகையால் செய்யப்பட்டது இதை நீங்கள் சாப்பிட்டால் அறை மணி நேரத்திற்கும் மேல் உடலுறவு கொள்ளலாம் என்று சொல்லுவார்கள் வாங்கிய பின்பு 5 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத மருந்து என்று அவர்களுக்கு தெரியும் ஆனால் இதன் விலை 4000
இவர்கள் அனைவரும் வடநாட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் சென்னயில் ஏதாவது ஒரு பெரிய வீடை வாடகை எடுத்து அரசாங்கத்திற்கு தெரியாமல் நடத்துபவர்கள் ஆனால் நீங்கள் போனில் கேட்டால் டெல்லியில் இருக்கிறோம் உங்கள் முகவரியை அனுப்பினால் உங்கள் வீட்டுக்கே ஒரு வாரத்தில் அனுப்பி வைத்து விடுகிறொம் என்பார்கள்
அங்கு வேலை செய்யும் நபர்கள் பெரும்பாலும் உண்மையை சொல்ல மாட்டார்கள் சென்னயில் ஏதோ மூலையில் தான் இருப்பார்கள் ஆனால் டெல்லியில் இருப்பதாக சொல்லுவார்கள்
இதில் அனுப்பப்படும் தரமில்லை மாற்றி அனுப்புங்கள் என்று கூறினால் பதிலே இருக்காது
இதில் ஏமாறுவது அப்பாவி ஏழை மக்கள் தான் அதுவும் அன்றாடங்காய்ச்சிகள் தான் என்பது தான் வேதனையான விஷயம்
நாளை யாரும் ஏமாறக் கூடாது என்றால் இந்த பதிவை கட்டாயம் ஷேர் செய்யவும் இந்த பதிவை பார்த்து இரண்டு பேர் திருந்தினாலே நல்ல விஷயம் தான்