இன்றைய காலகட்டத்தில டென்ஷன் இல்லாத மனிதர் யாரும் இல்லை. டென்ஷன் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அவைகள்...
1. இன்றைய கல்வி முறை
2. செய்தித்துறை, (ஊடகத்துறை)
3. வேலையில்லாத் திண்டாட்டம்
4. பொருளாதார சூழ்நிலை
5. தலைமுறை இடைவெளி
6. தகுதிக் கேற்ற வேலையின்மை
7. குறுகிய காலத்தில் செல்வந்தனாக வேண்டும் என்ற வெறி
8. இன்றைய அரசியல் சூழ்நிலை
9. போதைப் பொருட்கள்
10. தாழ்வு மனப்பான்மை
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சக்தி ஒன்று இருக்கிறது, இந்த சக்தியை விட வெளிச் சூழ்நிலைகளின் சக்தி அதிகமாகும்போது தான் நாம் டென்ஷனாகிறோம். நாம் நடந்து செல்கின்றபோது தவறுதலாக காலில் முள் குத்திவிட்டால் அது வலியை ஏற்படுத்துகின்றது.
அந்த வலியானது உள்ளே இருக்கும் முள்ளை வெளியே எடுக்கத் தூண்டுகிறது. அதைபோல, டென்ஷனும் ஒரு வலியைப் போன்றது தான். இந்த வலி ஏற்படும்பொழுது நமது வாழ்க்கையில் வாழும் முறையில் ஏதோ ஒன்றை மாற்றம் செய்யத் தூண்டுகிறது.
அதாவது நம்முடைய எண்ணும் முறையிலேயோ, பேசும் முறையிலேயோ, செயல்படும் முறையிலேயோ ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தத் தூண்டுகிறது. எனவே மனபாரமற்ற வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இறைவனின் அறிவுரைகளை உணர்ந்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது அவசியமாகிறது.
எனவே சூழ்நிலைகளையோ, நிகழ்வுகளையோ மனிதர்களையோ நம்மால் மாற்ற முடியாது. ஆனால் நம்முடைய கண்ணோட்டத்தை நாம் மாற்றி டென்ஷனைத் தவிர்த்து அமைதியாய் வாழக்கற்றுக் கொள்ளலாமே...!