துருக்கியைச் சேர்ந்த, 42 வயதான இப்ராகிம் யுசெல், கடந்த, 26 ஆண்டுகளாக, புகை பிடித்து வருகிறார். தினமும், நான்கு பாக்கெட் சிகரெட்டுகளை ஊதித் தள்ளும் இவர், யார் அறிவுரை கூறினாலும், கேட்பதில்லை. திடீரென்று ஒரு நாள் சிகரெட் பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்ற, எண்ணம் அவருக்கு, உதித்துள்ளது. அதை செயல்படுத்த ஹெல்மெட் வடிவில், உலோகத்தாலான, இரும்பு கூண்டை செய்து, அதை, தன் தலையில் மாட்டிக் கொண்டார்.

இந்த கூண்டில், தாமிரத்தாலான கம்பிகள், இறுக்கமாக பின்னப் பட்டுள்ளன. தூங்கும் நேரம், சாப்பிடும் நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில், இந்த கூண்டு, அவரது தலையில் மாட்டப்பட்டிருக்கும்.

இந்த கூண்டை திறப்பதற்கு, இரண்டு சாவிகள் உள்ளன. ஒரு சாவி, அவரது மனைவியிடமும், மற்றொரு சாவி, அவரது மகளிடமும் உள்ளன. அவர்கள் மனது வைத்தால் தான், கூண்டை திறக்க முடியும்.

சுலபத்தில் சில பழக்கங்கள் நம்மை தொற்றிக் கொள்கின்றன. ஆனால், அதிலிருந்து விடுபடுவதற்கு எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியுள்ளது பாருங்கள்!
 
Top