நவீன யுகத்தில் மாறி வரும் உணவுப் பழக்கத்தால் இப்போது பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் உடல் பருமனாகவே பிறக்கின்றனர். குழந்தைகள் ஆரோக்கியமாகவும் உடலில் கொழுப்பு சத்து அதிகம் ஆகாமலும் இருக்க நடைப்பயிற்சி அவசியம் என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வயதான காலத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்க குழந்தைப் பருவத்திலிருந்தே உடல் எடையை சரியாக பராமரிப்பது அவசியம் என்பதும் அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தைப் பருவத்தில் இருந்தே கொழுப்பு அதிகம் இருந்தால் அது பல்வேறு பிரச்னைகளை விளைவிக்கும் என்பது உலகின் பல்வேறு பகுதிகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நொறுக்குத் தீனியும், அடிக்கடி எதையாவது உண்ணும் பழக்கம், டி.வி முன் நீண்ட நேரம் இருக்கும் குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பதை கண்கூடாக பார்க்கலாம். குழந்தை பருவத்தில் அதிக எடை உள்ள குழந்தைகளின் ஆரோக்கியம் வாலிப பருவத்தில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தலாம். அவர்களால் சாதாரண வேலையை கூட வாலிபப் பருவத்தில் செய்வது கடினமாகிவிடுகிறது.

2 முதல் 17 வயது குழந்தைகள் 351 பேரிடம் நடத்தப்பட்ட சைக்கிள் எர்கோ மீட்டர் ஆய்வில் 2 முதல் 7 வயது வரை உடல் எடை குறைவாக இருந்த குழந்தைகளின் வாலிப பருவத்தில் உடல் உறுதியாகவும் ஆரோக்கியமாக இருந்தனர். 9 முதல் 17 வயது வரை ஓய்வு நேரத்தில் உடற்பயிற்சியை அதிகரித்து ஆய்வு செய்தபோது அவர்களின் உடல் ஆரோக்கியமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  நடைப்பயிற்சியானது குழந்தைப்பருவம் முதல் முதியோர் வரை உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் என்பது மட்டும் நிச்சயம்.

அனைத்து வகை முடி உதிர்தல் பிரச்னைகளுக்கு தீர்வு

முடி உதிர்தல், பொடுகு தொல்லை மற்றும் கூந்தல் அடர்த்தி குறைவு போன்ற பிரச்னைகள் இனி இல்லவே இல்லை. ஆம் ஏஞ்சல்ஸில் அட்வான்ஸ் ஏர் கேர் தெரபி மூலம் இத்தகையை பிரச்னைகளை போக்கிடலாம். போட்டோ லேசர் தெரபி மூலம் பெண்களின் கூந்தல் மறு வளர்ச்சி பெறலாம். இன்றைய காலகட்டத்தில் எல்லா வயதினருக்கும் முடி உதிர்தல் ஒரு பெரிய பிரச்னையாகி விட்டது.

இத்தகைய பிரச்னைகளை ஏஞ்சல்ஸில் உள்ள ஸ்டெம் செல் தெரபி மூலம் தீர்த்து வைக்கப்படுகிறது. ஸ்டெம் செல் அல்லது ஹேர்கேர் தெரப்பியால் உபயோகமில்லை என்ற முடிவுக்கு வந்தாலும் வழுக்கை தலைக்கு ஒரு நல்ல தீர்வு அட்வான்ஸ்டு சிலிகான் சிஸ்டம். இதன் மூலம் ஒரு மணி நேரத்திற்குள் முடி வளரும் என்று டாக்டர் ஜி. ராதிகா ரெட்டி தெரிவித்தார்.

புகைபிடிக்கும் பழக்கத்தால் பெண் இறப்பு விகிதம் அதிகரிப்பு

ஆண்களைப் போலவே பெண்களும் தற்போது அதிகளவில் புகைபிடிக்கத் தொடங்கியுள்ளனர். 80களில் இருந்ததை விட தற்போது பெண்கள் புகைபிடிப்பது அதிகரித்துள்ளது என்று நியூ இங்கிலாந்து மருத்துவ ஏடு தெரிவித்துள்ளது. நுரையீரல் புற்றுநோயால் பெண்கள் இறக்கும் ஆபத்து மருத்துவ வளர்ச்சி காரணமாக கடந்த 50 ஆண்டுகளாக பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

''புகைபிடிக்கும் பழக்கத்தால் கடுமையான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டாலும் பெண்கள் புகை பிடிக்கும் பழக்கம் அதிகரித்தே வருகிறது. பெண்களுக்கென குறைந்த அளவு நிக்கோட்டின் இருப்பதாக கூறி சிகரெட்டுகள் விற்கப்படுகின்றன'' என்று அமெரிக்க புற்றுநோய் ஒழிப்பு சங்க முன்னாள் துணைத் தலைவர் மைக்கெல் துன் கூறினார்.

1960களில் புகைபிடிக்காத பெண்களை விட புகைபிடிக்கும் பெண்கள் நுரையீரல் புற்றுநோயால் இறப்பது 2.7 சதவீதம் அதிகமாக இருந்தது. இந்த அளவு 2000,2010 கால கட்டத்தில் 25.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. 1960களில் புகைபிடிக்காத பெண்களை விட புகைபிடிக்கும் பெண்கள் நீண்டகால நுரையீரல் வியாதிகளால் பாதிக்கப்படுவது 4 சதவீதமாக இருந்தது. இது தற்போது 22.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று அந்த மருத்துவ ஏட்டின் கணிப்பு தெரிவிக்கிறது.

உங்கள் பழைய மூட்டுகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை
‘வாழ்க்கையே இயக்கம்; இயக்கமே வாழ்க்கை’

ஆர்திரிடிஸ் என்றால் என்ன? மூட்டு மேற்புறங்களை மூடியிருக்கும் சவ்வு தேய்ந்து போதல் மற்றும் கிழிந்து போவது ஆர்திரிடிஸ் ஆகும். ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் முக்கியமாக வயதான ஆண்கள் மற்றும் பெண்களை பாதிக்கிறது, வலி, நடக்க முடியாமை மற்றும் உருகுலைவுக்கு காரணமாகிறது. இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு உண்டு என்பதை பற்றிய தீவிர விழிப்புணர்வுடன் கடந்த பத்தாண்டுகளில் இவையனைத்தும் மாறியுள்ளது என்கிறார் மருத்துவர் நந்தகுமார் சுந்தரம்.

மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் மூட்டுகளுக்கு இடையில் குருத்தெலும்புகளாக செயல்படும் ஒரு பிளாஸ்டிக் செருகலுடன் இரண்டு பக்கத்திலும் உலோக பொருத்துகளால் மூட்டின் தேய்ந்த பாகங்கள் மாற்றியமைக்கப்படுகிறது. இந்த பொருத்துகளின் தயாரிப்பில் பல்வேறு உலோகங்களும் கலப்பு உலோகங்களும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அவை எலும்பு சிமென்ட் அல்லது சிமென்ட்சாரா தொழிற்நுட்பம் மூலம் நோயாளியின் எலும்பில் பொருத்தப்படலாம்.

நோவா ஸ்பெசாலிட்டி சர்ஜரியில், உலோகத்தின் கடினத்தன்மையும் செராமிக்கின் துல்லிய மேற்புற நிறைவும் கொண்ட, ஆக்ஸினியம் (ஆக்ஸிஜனேற்றம் செய்யப்பட்ட ஜிர்கோனியம்) உலோகத்தை மூட்டு மாற்று அறுவை சிகிக்சைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. இது தேய்மானமின்றி நீண்ட காலம் உழைப்பதை உறுதி செய்கிறது.
இன்று வரையில் எம்ஆர்சி நகர், நோவா ஸ்பெசாலிட்டி சர்ஜரி மருத்துவமனையில் 500,க்கு மேற்பட்ட மூட்டு அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன என்று மருத்துவமனை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்
 
Top