உறவினர்கள்- விருந்தினர்களை டிரைன்
ஏற்றிவிட்டாலும் சரி அவர்கள் ஊரிலிருந்து வந்தாலும் சரி...அவர்கள் டிரைனில்
எந்த ஊரில் வந்து கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் வரும் ஊருக்கு
அருகாமையில் உள்ள ஸ்டேஷன் பெயர் என்ன? குறிப்பிட்ட ஸ்டேஷனுக்கு டிரைன்
வரும் நேரம் என்ன,? டிரைன் எவ்வளவு நேரம் காலதாமதமாக வருகின்றது என அனைத்து
விவரங்களையும் நாம் இந்த இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம். பொதுமக்கம்
வசதிக்காக இந்திய ரயில்களின் இயக்கத்தினை ஆன்லைன் மூலம் மேப் (வரைபடம்)பில்
அறிந்து கொள்ள ரயில்வே துறை இந்த இணையதளத்தினை அறிமுகம் செய்துள்ளது. இந்த
இணையதள் முகவரி காண இங்கு கிளிக் செய்யவும்.
இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில்
டிரைன் மற்றும் ஸ்டேஷன் என இரண்டு டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.

உங்களுக்கு டிரைன் பெயர் மற்றும் டிரைன் எண்
தெரிந்தால் அதில் உள்ள விண்டோவில் தட்டச்சு செய்து கோ கொடுங்கள்.
உங்களுக்கான அடுத்த விண்டோ ஓப்பன் ஆகும்.நீங்கள் குறிப்பிட்ட ஸ்டேஷனில்
இருந்தால் அந்த ஸடேஷனில் அடுத்து வரும் டிரைன் விவரங்களை
அறிந்துகொள்ளலாம்.நான் இப்போது கீழே உள்ள விண்டோவில் டிரைன் எண்
கொடுத்துள்ளேன்.




இந்த மேப்பில் நீங்கள் இந்தியாவின் எந்த
இடத்தினையும் கிளிக்செய்து அந்த இடத்தில் அந்த நேரத்தில் எந்த டிரைன்
போகின்றது என்கின்ற விவரங்களை அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில்
பாருங்கள். நீலம் மற்றும் சிகப்பு நிற அம்புகுறிகள். இருக்கும்.


இனி யாரை வேண்டுமானாலும் டிரைனில் ஏற்றிவிட்டு அவர்கள் ;டிரைன் இப்போது எந்த ஸ்டேஷன் போய்கொண்டு இருக்கின்றது. அடுத்து எந்த ஸ்டேஷன் வரும் என்கின்ற விவரங்களை கொடுத்துக்கொண்டே இருக்கலாம். செல்போன் மூலமும் நாம் தகவல்களை அறிந்துகொள்ளலாம். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். மற்றவர்களுக்கும் இந்த தளத்தினை பற்றி சொல்லுங்கள்.