தோரணங்கள் பொதுவாக இரண்டு வகைகளாக வகுக்கப்படும்.
1. மங்கள தோரணம்.
2. அமங்கள தோரணம்
மங்கள தோரணம்:
மாவிலை தோரணம், சமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலான மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படுபவை மங்கள தோரணங்கள் எனப்படும். இவை நான்கு குருவிகளைக் கொண்டதாகக் காணப்படும். குருவிகளின் தலை மேல் நோக்கியும் வால் கீழ் நோக்கியும் இருக்கவேண்டும்.
அமங்கள தோரணம்:
மரணவீடு முதலான அமங்கள நிகழ்வுகளில் கட்டுவது அமங்கள தோரணம் எனப்படும். இது மூன்று குருவிகளைக் கொண்டிருக்கும். குருவிகளின் தலை கீழ் நோக்கியும் வால் மேல்நோக்கியும் இருக்கவேண்டும்.