அம்மா அடிப்பதாய் வகுப்பில் வந்து அழுவது வாடிக்கையாகி விட்டது அந்தச் சிறுமிக்கு .... அன்று கேட்டேன், ' அம்மா ஏன் அடிக்கடி அடிக்கறாங்க?' " அம்மாவுக்கு என்னை பிடிக்காது " ஏன்? "என்னோட ஜாதகம்தான் அப்பா சாவுக்கு காரணமாம் " பாசத்தைவிடவும் வலிவாகவே இருக்கின்றன இந்த பாழாய்ப் போன நம்பிக்கைகள்...!