சுவிஸ் பாசல் நகர தாவரவியல் பூங்காவில் பூத்திருக்கும் அரிய ரக டைடான்அரும் மலரைக் காணபதற்கு பெருந்திரளான மக்கள் அங்கு வந்தவண்ணம் உள்ளனர். உலகில் பூக்கும் மிகப்பெரிய மலர் இனங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த மலர் பெரிய வெள்ளித் தினத்தன்று பூக்க ஆரம்பித்துள்ளது. இதன் விஞ்ஞானப் பெயர் Amorphophallus titanium என்பதாகும். இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவுப்பகுதியில் உள்ள மழை வீழ்ச்சிக் காடுகள் தான் இதன் தோற்ற இடம்.
அங்கு இவை சுமார் மூன்று மீட்டர் உயரத்துக்கு வளரும் பண்பு கொண்டவை. இவை
அரிதாகப் பூக்கும் ஒரு மலரினம். இதன் சுகந்தம் பூச்சிகளையும் வண்டுகளையும்
கவர்ந்து இழுக்கக் கூடியவை.
ஒரு சில நாட்களில் இது வாடிப்போய்விடும். பெஸல் நகரில்
இந்தப் பூ இந்தளவுக்கு வளர 17 ஆண்டுகள் எடுத்துள்ளன. உலகம் முழுவதும் இதனை
ஒத்த 134 பிரதிகள் உள்ளன. அவற்றுள் அரைவாசிக்கும் அதிகமானவை அமெரிக்காவில்
உள்ளன.