அதன் பிறகு "Mutual Fund" பற்றி எந்த பதிவும் எழுதவில்லை. நிறைய நண்பர்கள் பின்னூட்டங்களில் "Mutual Fund" பற்றி எழுதுமாறு சொல்லி இருந்தார்கள். அவர்களுக்காக இந்த பதிவு.
Mutual Fund என்பதும் பங்குச்சந்தை அல்லது கடன் பத்திரங்கள் சார்ந்த முதலீடு தான். பங்குசந்தையில் அனுபவமில்லாதவர்களுக்கு நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது என்பது கடினமான செயல். அவர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது தான் Mutual Fund.
தேர்ச்சி பெற்ற பொருளாதார அறிவுடையவர்களை வைத்து Mutual Fund மேலாண்மை செய்யப்படுகிறது. ஏதேனும் ஒரு பங்கில் மட்டும் முதலீடு செய்யாமல் பல துறைகளை சார்ந்த, சிறிய, பெரிய நிறுவனங்கள் என்று கலந்து முதலீடு செய்வார்கள். அது போல் Mutual Fundன் ஒரு பகுதியினை அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்வார்கள். இவை பொதுவாக "Fixed Return" கொடுக்கும் முதலீடுகள்.
இதனால் முதலீட்டில் ஒரு வித ரிஸ்க் சமநிலை ஏற்படுகிறது. அது நமது முதலீட்டிற்கு பங்குகளை விட ஒரு வித பாதுகாப்பு கொடுக்கிறது. பொதுவாக நிலை வைப்பு(Fixed Deposits) கணக்கை விட Mutual Fundல் அதிக RETURN கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதாவது குறைந்தது 12% மேல் எதிர் பார்க்கலாம். ஆனாலும் சந்தை நிலவரங்களைப் பொறுத்து மாறுபடும்.
Mutual Fund பங்குகளை போன்று SEBI அமைப்பு மூலம் கண்காணிப்பு செய்யப்படுகிறது.
இந்தியாவில் Mutual Fund 1963ல் அரசு துறை சார்ந்த UTI வங்கியால் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு SBI, Canara Bank, Punjab National Bank போன்ற வங்கிகளும் அறிமுகம் செய்தார்கள். 1993 பிறகு Franklin போன்ற தனியார் நிறுவனங்களும் அறிமுகம் செய்தார்கள். இந்தியாவில் தற்போது 43 நிறுவனங்கள் பரஸ்பர நிதி நிருவனங்களை நடத்தி வருகின்றன.
நாம் இந்த வருடங்களை கூறக் காரணம் Mutual Fundல் முதலீடு செய்யும் போது அந்த நிறுவனம் சார்ந்த வரலாறினை(Past History) அறிந்து கொள்வதும் மிக முக்கியம்.
Mutual Fundன் செயல் திறன் Net Asset Value(NAV) என்ற அலகினை பொருத்து அளவிடுவார்கள். இது சந்தையின் ஏற்ற, இறக்கங்களுக்கு ஏற்ப மாறுபடும்.
உதாரணத்துக்கு ஒரு பரஸ்பர நிதியின் ஒரு NAV அலகு 50 ரூபாய் என்றால், நாம் 10000 ரூபாய் முதலீடு செய்வதாக கருதிக் கொண்டால் நமக்கு 200 அலகுகள்(Unit) கிடைக்கும்.
சந்தை நிலவரத்தைப் பொறுத்து NAV அலகு 55 ரூபாய்க்கு சென்றால் நமது முதலீட்டின் மதிப்பு 200*55=11000 ரூபாயாக மாறியிருக்கும்.
Mutual Fundனை அதனுடைய முதலீடு தன்மை சார்ந்து சில பிரிவுகளாக பிரிப்பார்கள். அதனைப் பொறுத்து "RISK" மற்றும் "RETURN" வேறுபடும். அதனை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
Equity Fund
இந்த நிதியில் பெரும்பாலான முதலீடுகளை பங்குகளில் முதலீடு செய்வார்கள். இதுவும் பங்குகளில் பரவலாக்கப்பட்ட தன்மையைப் பொறுத்து பல வகைகளாக பிரிக்கப்பட்டிருக்கும்.பல துறைகள், பெரிய, சிறிய நிறுவனங்களில் சமநிலை செய்யப்பட்டிருந்தால் "Diversified Fund" என்பார்கள். இதில் சராசரியான "RETURN" மற்றும் குறைவான "RISK"ம் இருக்கும். ஆரம்ப கால பரஸ்பர நிதி முதலீட்டர்களுக்கு ஏற்றது.
சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தால் "Midcap Fund" என்பார்கள். இதில் அதிகமான "RETURN" மற்றும் அதிகமான "RISK"ம் இருக்கும். நல்ல அனுபவமானவர்களுக்கு ஏற்றது.
ஒரே துறை சார்ந்து முதலீடு செய்து இருந்தால் "Sector Specific Fund" என்பார்கள். இதில் "RETURN" மற்றும் "RISK" துறை சார்ந்து இருக்கும். பொதுவாக நுகர்வோர்(FMCG) மற்றும் மருந்து(Pharma) துறை சார்ந்த நிதிகள் நல்ல பாதுகாப்பானது. நல்ல அனுபவமானவர்களுக்கு ஏற்றது.
வரி சலுகை பெறுவதற்காக உள்ள பரஸ்பர நிதிகளுக்கு "Tax Saving Fund(ELSS)" என்பார்கள். குறைந்தது 3 வருட கால முதலீட்டில் செய்யப்பட வேண்டும். நீண்ட காலமாக இருப்பதால் RISK குறைவாக நல்ல RETURN கொடுக்கும். அது போக வரி சலுகையும்(~10%) நமக்கு லாபம் தான்.
Debt Fund
இந்த பரஸ்பர நிதி அரசு, தனியார் நிறுவங்கள் சார்ந்த கடன் பத்திரங்களில் (Bond) முதலீடு செய்யப்படும். இவை பொதுவாக நிலையான வருமானம் கொடுக்கவை. வைப்பு நிதியை(Fixed Deposits) விட சிறிது அதிக வருமானம் கொடுக்கும். இது ஆரம்ப கால பரஸ்பர நிதி முதலீட்டர்களுக்கு ஏற்றது.Balanced Fund
இங்கு பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் இரண்டிலும் சிலவிதங்களில் பகிர்ந்து முதலீடு செய்யப்பட்டிருக்கும். இதனால் ஓரளவு சராசரியான வருமானம் மற்றும் சராசரியான RISKம் இருக்கும்.ஆக, முதலீட்டார்களின் தேவையைப் பொறுத்து அவர்கள் நிதியனைத் தேர்ந்தெடுக்கலாம்.
இது போக, ஒவ்வொரு பரஸ்பர நிதியிலும் DIVIDEND, GROWTH என்ற இரண்டு பிரிவுகள் உள்ளன. அதாவது Mutual Fundல் கிடைக்கும் வருமானத்தை எப்படி திருப்பி கொடுக்கும் முறையைக் குறிப்பிடுகிறது.
DIVIDEND முறையில் ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட சதவீத லாபம் பகிர்ந்தளிக்கப்படும். GROWTH முறையில் ஒவ்வொரு வருட லாபமும் மீண்டும் அதில் முதலீடு செய்யப்படும்.
எம்மிடம் கேட்டால் இளைய தலைமுறைக்கு GROWTH பொறுத்தமானது என்று கருதுவோம். ஏனென்றால் "Compound Interest" என்பது மிக பலமானது. நாம் திருப்பி பெரும் போது ஒரு பெரிய தொகையினைப் பெறலாம்.
இந்த பதிவில் Mutual Fundன் முக்கியமானவற்றை மேலோட்டமாக சொல்லியுள்ளோம். இன்னும் நிறைய உட்பிரிவுகள், முறைகள் உள்ளன.