சம‌்‌ஸ்‌கிருத மொ‌‌ழி‌யி‌ல் தடா எ‌ன்றா‌ல் கு‌‌ன்று (சி‌றிய மலை) எ‌ன்று அ‌ர்‌த்த‌ம். இ‌ந்த தடாசன‌‌ம், சம‌ஸ்‌தி‌தி ஆசன‌ம் எ‌ன்று‌ம் அ‌றிய‌ப்படு‌கிறது. சம‌ஸ்‌தி‌‌தி எ‌ன்றா‌ல் ‌‌நிலையாக ஒரு ‌திசை‌யி‌ல் ‌நி‌ன்று செ‌ய்வது எ‌ன்று பொரு‌ள்படு‌கிறது.

இ‌ப்போது தடாசன‌‌ம் செ‌ய்யு‌ம் முறையை‌ப் பா‌ர்‌ப்போ‌ம்.

செய்முறை :


1. விரிப்பின் மீது 1/2 அடி அளவு இடைவெளிவிட்டு கால்களை வைத்து நிற்கவும்.

2. உ‌ங்களது உட‌ல் எடை இர‌ண்டு கா‌ல்களு‌‌ம் சமமாக தா‌ங்கு‌ம் படி ‌நேராக ‌நி‌ற்கவு‌ம்.

3. கைகளை பக்கவாட்டில் சாதாரணமாக ‌விடவு‌ம்.

4. இப்போது மெதுவாக குதிகால்களை உயர்த்தி நிமிர்ந்து உள்ளங்கைகளை மேல் நோக்கி திரும்பி ஒன்று சேர்த்து நமஸ்காரம் செய்வது போல் வை‌க்கவு‌ம்.

5. கால் விரல்கள் ம‌ற்று‌ம் முன் கால் பாகங்க‌ள் உடல் எடையை தா‌ங்குவது போ‌ன்ற ‌நிலை‌யி‌ல் 10 எண்ணிக்கைகள் இருக்க வேண்டும். கை முட்டியை வளைக்கக் கூடாது. நேராக இரு‌க்க வே‌‌ண்டு‌ம்.

4. மெதுவாக கைகளை பிரித்து உட‌ம்‌பி‌ன் ‌பி‌ன்ப‌க்க‌ம் கொண்டு வர வேண்டும். அதே சமய‌ம் குதிகால்களை கீழ் நோக்கி கொண்டு வந்து விரிப்பின் மீது வைத்து தலையை எ‌வ்வளவு முடியுமோ அ‌வ்வளவு உய‌ர்‌த்த வே‌ண்டு‌ம்.

5. அ‌ந்த ‌‌நிலை‌யி‌ல் 5 ‌நி‌மிட‌ம் இரு‌ந்து‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் ‌மீ‌ண்டு‌ம் தடாசன ‌நிலை‌க்கு‌ச் செ‌ல்ல வே‌ண்டு‌ம்.

6. இ‌வ்வாறு மூ‌ன்று முறை செ‌ய்து‌வி‌ட்டு ஓய்வு எடுக்க வேண்டும்.

பலன்கள் :

இ‌ந்த ஆசன‌த்தை செ‌ய்வத‌ன் மூல‌ம் உடலு‌ம், மனது‌ம் பு‌த்துண‌ர்வு பெறு‌கிறது.

இ‌ந்த ஆசன‌த்தை 18 வயது வரை செய்து வந்தால் உயரமாக வளர இவ்வாசனம் உதவும்.

கர்ப்பிணி பெண்கள், முதல் 6 மாதம் வரை இவ்வாசனத்தை செய்து பலன் பெறலாம்.

அதனால் சுகப்பிரசவம் உண்டாகும். குதிகால் வலியை போக்கும். ஞாபகசக்தி, மன ஒருமைப்பாட்டை வளர்க்கிறது. வளைந்த காலை உடையவர்கள் நேரே நிமிர்ந்த காலை அடையலாம்.

திருமணம் ஆகாத பெண்கள் இவ்வாசனத்தைப் பழகி வந்தால் திருமணம் ஆன பின்னர் குழந்தை பெறுவதற்கான அவயங்கள், கருப்பை, யோனி ஆகியவை ஏற்றம் அடையும்.
 
Top