தேர்வு எழுதும் மாணவர்கள், அருகில் அமர்ந்திருப்போரை திரும்பி பார்த்து, காப்பி அடிக்க முடியாதபடி, மாணவர்களின் தலையில், இடது மற்றும் வலது புறங்களில், அட்டைகளை கட்டி தொங்க விட்டு விட்டனர். இந்த புகைப்படம், சமூக வலைத் தளங்களில் வெளியானதால், பல்கலை நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு, கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஆனால், பல்கலை நிர்வாகமோ,"எங்களின் இந்த நடவடிக்கையை, தேர்வு எழுதிய மாணவர்களே, ரசித்து, ஏற்றுக் கொண்டனர். மற்றவர்கள் தான், தேவையின்றி, பிரச்னை எழுப்புகின்றனர். இதை சீரியசாக பார்க்காதீங்க, காமெடியா பாருங்க...' என, அலட்சியமாக பதில் அளித்து, மழுப்புகிறது.