உலகளவில் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. அன்றாடம் நாம் பார்க்கும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், டச் ஸ்கிரீன் தொழல்நுட்பம், மற்றும் பிக்சல் கிளாரிட்டி (Pixel Clarity) போன்ற நுட்பங்கள் அனைத்தும் தொழில்நுட்பம் வளர்ந்து வருவதையே காட்டுகிறது. மொபைல் போன், டேப்ளட் PC, தொலைக்காட்சித் திரைகள், கம்ப்யூட்டர் திரைகள் என எல்லாற்றிலும் நவீன டச் ஸ்கிரீன் தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுவிட்டது. 
தொடுதிரை எனும் Touch Screen ஐப் பற்றி ஒரு சில வார்த்தைகளைக் கூற கேட்டிருப்போம். LED, Super AMOLED, Super IPS, IPS போன்ற வார்த்தைகளை நிச்சயம் விளம்பரங்களிலோ அல்லது இணையதளங்கள், பத்திரிக்கை விளம்பரங்களில் குறிப்பிட்டிருப்பார்கள். 
இவை அனைத்தும் சிறு சிறு வித்தியாசங்களுடன் கூடி தொடுதிரை நுட்பத்தை குறிக்க கூடிய சொற்களே அன்றி வேறில்லை. 
இவற்றில் முக்கியமானதாக மூன்று வகைச் சொற்களாகப் பிரித்திடலாம். அவை. 1. LCD, 2. OLED, 3. PLASMA. 
touch-screen-technology-lcd-led-plasma-oled

1. LCD தொழில்நுட்பம்: 

LCD என்பது Liquid Crystal Display என்பதன் சுருக்கமாகும். இன்று பயன்பாட்டில் இருக்கும் பெரும்லான காட்சித் திரைகள் LCD திரைகள்தான். இந்த LCD Screen ஆனது கம்ப்யூட்டர் மானிட்டராக, டேப்ளட் பிசிகளின் தொடுதிரைகளாக, மொபைல் போன்களின் திரைகளாக பயன்பாட்டில் உள்ளது. இதில் பல்வேறு வகைகள் இருப்பினும் அவற்றில் முக்கியமாக மூன்று வகைகளைக் கூறலாம். 
1. நிமேட்டிக் (Nematic), 2. இன் பிளேன் ஸ்சுவிட்சிங் (In Plane Switching) 3. பேட்டர்ன்ட் வெர்டிகிள் அலைன்மென்ட் (Patterned vertical alignment)
1. நிமேட்டிக் (Nematic)
இத்தொழில்நுட்பம் உடைய திரைகளின் பேனல்கள்  விலை மலிவானவை. எனவே இதுபோன்ற திரைகள் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. ஆனால் இதில் வண்ணத்தைத் திரைக்குக் கொண்டு வரும் ரெஸ்பான் டைம் மிக மிக குறைவு. அதாவது வண்ணத்தைத் திரைக்கு கொண்டு வர 1 மில்லி செகண்ட் தான் ஆகும். ஆனால் திரையின் முழுமையான காட்சி வெளிப்பாட்டில் ஒரு சில குறைகளை இது கொண்டுள்ளது. 
2. இன் பிளேன் ஸ்சுவிட்சிங் (In Plane Switching)
ஹிடாச்சி நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை வடிவமைத்தது. டிஎன் பிலிம் தொழில்நுட்பத்தில் உள்ள குறைபாட்டை சரி செய்வதற்காக இந்த தொழில்நுட்பத்தை கொண்டுவந்த்து ஹிடாச்சி நிறுவனம். மற்ற தொழில்நுட்பங்கள் அனைத்தும் சிறப்பாக இருப்பினும் இதில் ஒரு குறை உள்ளது. இதன் Refresh Rage தேவையான அளவு இல்லையென்பதால் இத்தொழில்நுட்பமும் அதிக அளவு தற்பொழுது பயன்படுத்தப்படுவதில்லை. 
 3. பேட்டர்ன்ட் வெர்டிகிள் அலைன்மென்ட் (Patterned vertical alignment)
மேற்குறிப்பிட்ட இரண்டு தொழில்நுட்பங்களுக்கும் இடையேயான தரத்தைப் பெற்றிருக்கும் இத்தொழில்நுட்பம் சிறந்ததாகவும், சிறப்பாகன ஒளிக்காட்சியைத் தருவதாவும் ஒரு சில நிறுவனங்கள் கூறியுள்ளது. 

2. LED தொழில்நுட்பம்: 

இதுவரைக் குறிப்பிட்ட தொழில்நுட்பத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது இது ஒரு வித்தியாசமான தொழில்நுட்பமாகும். LED என்றும் Lightemitting Diode மற்றும் TFT திரைக்காட்சிகள் தற்பொழுது பெரும் அளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பெரிய அளவில் வண்ணங்கள் கிடைப்பதால் தொலைக்காட்சிப் பெட்டிகளில் அதிகளவு இந்த தொழில்நுட்பம் தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிக நாள் உழைக்க கூடியது. குறைந்த அளவு மின்சாரத்தைப் பயன்படுத்தக்கூடிய இத்தொழில்நுட்பம். 
TFT தொழில்நுட்பம்: 
Thin Film Transistor என்ற இந்த தொழில்நுட்பம் மேற்குறிப்பிட்ட அனைத்து திரைத் தொழில்நுட்பங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன என்றாலும் தற்போதுள்ள மொபைல் சாதனங்களின் திரைகளுக்கு இத்தொழில்நுட்பமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. 

3. Plasma தொழில்நுட்பம்: 

பெரிய திரைகள் கொண்ட டிவிகளிலும், கம்ப்யூட்டர் திரைகளிலும் இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றன. வித்தியாசமான காட்சியைக் காட்ட இத்தொழில்நுட்பம் உதவுகிறது. இத்தொழில்நுட்பத்தின் சிறப்பே வண்ணங்கள் மிகச்சிறப்பாக காட்டப்படுவதுதான். திரையிலிருந்து விலகி பார்த்தாலும் வண்ணங்கள் மாறாது. இதுபோன்ற ஒரு பெரிய டிவியை சமீபத்தில் LG நிறுவனம் வெளியிட்டிருந்ததை நமது தொழில்நுட்பம் தளத்தில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். 
இத்தொழில்நுட்பத்துடன் இயங்க்கூடிய பெரிய பெரிய திரைகள் விழா நடக்கும் அரங்குகளில் வைக்கப்படும். Sports, Cricket விளையாட்டு நடக்கும் திடல்களில் இத்தகைய ஸ்கிரீன்கள் வைக்கப்பட்டிருக்கும். அந்த ஸ்கிரீன்கள் அனைத்தும் Plasma தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டவையே.
இத்தொழில்நுட்பத்தில் வண்ணத்தைக் கொண்டு வருவதற்குப் பயன்படும் Responsive time மிக மிக குறைவு. 
இத்தொழில்நுட்பம் அதிகளவு மின்சாரம் எடுத்துக்கொள்ளும். 
கணினி, டேப்ளட் பிசி, மொபைல் திரைகள் என எவற்றிலும் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியாது. காரணம் அத்தொழில்நுட்பம் மூலம்  அதிகளவில் ஸ்கிரீன் ரெசொல்யூசன்களை கொண்டுவர முடியாது.
 
Top