1. கத்தி சாணைக்கல்லைத் தின்கிறது, சாணைக்கல் கத்தியைத் தின்கிறது.

2. உன் அயலான் தாடியில் தீ பிடிப்பதைப் பார்த்தால், உன் தாடியை நனைத்துக் கொள்.

3. பழக்கம் ஓர் முழு வளர்ச்சியடைந்த மலை, அதைத் தாண்டுவதும் கடினம், தகர்ப்பதும் கடினம்.

4. அரசனைவிடப் பெண் அதிக தந்திரம் உள்ளவள்.

5. கரி, சாம்பலைப் பார்த்துச் சிரிக்கிறது.

6. கஞ்சனுடைய பணப்பெட்டியைத் திறக்கும் சாவி - சாவின் கையில் இருக்கிறது.

7. உன்னைப் புண்படுத்துவது எது என்று உனக்குத் தெரிந்தால் மற்றவர்களைப் புண்படுத்துவது எது என்று தெரிந்துவிடும்.

8. மருந்தில்லாமல் குணப்படுத்துவது ஒரு நல்ல காரியம்.

9. திறமையான நீச்சல்காரனைத்தான் ஆறு அடித்துக்கொண்டு செல்கிறது.
 
Top