'Dooms Day Clock' பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? உலகம் எப்போதெல்லாம் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறதோ அப்போதெல்லாம் எச்சரிக்கை விடுக்கும் முகமாக இந்த Doomsday Clock ஐ ஞாபகப்படுத்தி விடுகிறார்கள் அணு விஞ்ஞானிகள்.
1953ம் ஆண்டு அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையில் அணு ஆயுதச் சோதனை நடைபெற்ற போது 2 நிமிடங்களுக்கு Dooms Day Clock பொருத்தப்பட்டிருந்தது. 1963ம் ஆண்டு அமெரிக்கா - சோவியத் யூனியன் என்பன தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பரிசீலிக்க ஒப்பந்தம் மேற்கொண்ட போதும், 1972ம் ஆண்டு அமெரிக்கா - சோவியத் யூனியன் SALT, Anti-Ballastic ஒப்பந்தங்களை மேற்கொண்ட போதும், 1984ம் ஆண்டு அமெரிக்கா - சோவியத் யூனியன் தமது அணுவாயுதங்கள் பாவணை தொடர்பிலான பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்ள முயற்சித்த போதும், 1991ம் ஆண்டு அமெரிக்கா - ரஷ்யா இடையிலான அணுவாயுதங்களை குறைப்பது தொடர்பிலான ஒப்பந்தங்கள் பயனின்றி போன போதும் இறுதியாக 2012ம் ஆண்டு, அணுவாயுதங்களை கட்டுப்படுத்த உலகத் தலைவர்கள் தவறவிட்ட போதும், காலநிலை மாற்றத்திற்கு முறையான விதத்தில் பதில் அளிக்கத் தவறிய போதும் இந்த Dooms Day Clock பொருத்தப்பட்டிருந்தது.